இழுப்பு என்னும் இசிவு நோய்குழந்தைக்கு இழுப்பு நோய் வந்தால் கை-கால் உதறி பல் கிட்ட ஆரம்பிக்கும. உடனே காயப்படுத்தாத சிறு பென்சில் அல்லது கட்டையை இரு பல் வரிசைக்கு நடுவே வைத்து விடவேண்டும் பிறகு இஞ்சியை தட்டி சாறு எடுத்து சர்க்கரை சேர்த்துப் புகட்டிவிட வேண்டும். பூண்டைத்தட்டி ஒரு துணியில் கட்டி விளக்கில் காட்டினால் அதிலிருந்து ஒரு எண்ணை வழியும் அதை உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் விலா முதலிய இடங்களில் தடவ வேண்டும்.

வேப்பெண்ணையும் தடவலாம். சிறு குழந்தைகள் இருக்குமிடத்தில் இந்த எண்ணையை வைத்திருப்பது நல்லது. குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வந்தால், தினசரி 3 வேளை, 2 தேக்கரண்ழ அளவு திராட்சைப் பழச்சாறு கொடுங்கள். வலிப்பு நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் திராட்சைப் பழத்திற்கு மட்டுமே உண்டு.

தூதுவளை இலைச்சாறு இஞ்சிச்சாறு, துளசிச்சாறு இவைகளை ஒன்று சேர்த்து, அதற்கேற்ப தேன் சேர்த்து, ஒரு தேக்கரண்டி வீதம் குழந்தைகளுக்கு 3- நாட்கள் கொடுக்க, தெக்கத்திக்கணை என்னும் இழுப்பு உடனே நிற்கும். கபம் கரைந்து ஆரோக்கியம் பெறும். சில குழந்தைகளுக்கு வாயில் மாவு மாதிரி வெள்ளை படிந்து இருக்கும். அதை நீக்க மாசிக்காயை சந்தனக்கல்லில் உரசி. அந்த விழுதை குழந்தையோட நாக்கில் தடவினால் போதும். சின்னக் குழந்தை வாந்தி பண்ணினால் வசம்பைச்சுட்டுப் பொடி பண்ணி ஒரு ஸ்பூன் தாய்ப்பாலில் கலந்து, நாக்கில் தடவினால் உடனே குணம் கிடைக்கும்.

வசம்புக்கு பிள்ளை வளர்ப்பான்னு பேரே உண்டு. குழந்தைகளுக்கு வாந்தியும், பேதியுமானால், மருந்துக் கடையில் கிடைக்கக் கூடிய துளசி விதையை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து, ஒரு சங்கு வீதம் கொடுக்க, உடனே நிற்கும். துளசிச் சாற்றில் ஒரு காசு எடை எடுத்து வெற்றிலையில் விட்டு கொஞ்சம் தேன் சோ;த்துக் குழப்பி குழந்தையின் வாயில் தடவினால் வாந்தி நின்றுவிடும். குழந்தை நன்றாகப் பால் குடிக்கும்.

துளசி விதையை நனறாக அரைத்துப் பசும்பாலில் கலந்து, ஒரு சங்கு வீதம் கொடுக்க வாந்தியும் பேதியும் உடனே நிற்கும். ஒரு வயது குழந்தைக்கு பல் முளைக்கும்போது, மலக்கட்டு உண்டாகும். ஜலதோஷம், காய்ச்சல் உண்டாகும். அப்போது திராட்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து, தினமும் இருவேளை 1 ஸ்பூன் அளவு கொடுத்துவரவும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
Source: Dinakaran