சுவாசக் குழாயில் வெளிப்பொருள்கள்சுவாசக் குழாய் அல்லது மூச்சுக் குழாயில் வெளிப்பொருள்கள் சிக்கிக்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் பெரும்பாலும் மூன்று வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்குத்தான் ஏற்படுகின்றன. கண்ணில் தென்படும் சிறிய, அழகான, வண்ணமயமான பட்டாணி, பட்டன்கள், சிறிய பேட்டரிகள், நாணயங்கள் போன்ற பொருள்களை வாயிலோ அல்லது மூக்கிலோ குழந்தைகள் போட்டுக்கொள்ளும். அவை மூச்சுக் குழாயிலோ அல்லது உணவுக் குழாயிலோ அடைத்துக் கொள்ளும்.

மூன்று வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளில் சுமார் 75 சதவீதம், இப்படி வெளிப்பொருள்களை மூக்கு அல்லது வாயில் போட்டுக் கொள்வதால் தான் ஏற்படுகின்றன.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபாதிப்புகள்

பாதிப்புகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1. உடனே ஏற்படும் பாதிப்புகள்

நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள், மூச்சுக் குழாய் முழுமையாக அடைப்பட்டால் உடனடியாக முச்சுத் திணறல் ஏற்பட்டு, கை, கால்களை முறுக்கிக் கொள்ளும். இந்த நிலை தொடர்ந்தால் நினைவிழந்து விடும். உடல் தளர்ந்து வலிப்பு ஏற்படும். அவசரக் சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழக்கும் அபாயம் உண்டு. அடைப்பு ஓரளவுக்குத்தான் என்றால், தொடர்ந்து இருமல் வரும். பேச முடியாது. அடைப்பைப் பொறுத்து வலிப்பு ஏற்படலாம் அல்லது நினைவிழக்கலாம்.

2. சிறிது நேரத்துக்குப் பிறகு ஏற்படும் பாதிப்புகள்

மூச்சுக் குழாய்க்குள் சென்ற பொருள்கள், அடைத்துக் கொள்ளாமல் ஏதாவது ஓர் இடத்தில் ஒதுங்கிவிட்டால், ஆரம்பத்தில் ஏற்பட்ட மூச்சுத் திணறல், இருமல் ஆகியவை நின்றுவிடும். இதைப் பார்த்து, மூக்கில் எதுவும் இல்லை என்று மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள். ஆனால், அடுத்த சிறிது நேரத்திலோ அல்லது சிலநாள்களிலோ மோசமான பின்விளைவுகள் ஏற்படும் அபாயம் உண்டு.

3. மோசமான பின் விளைவுகள்/ பாதிப்புகள்

மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தாமல் நீண்ட நாள்களாக ஒரே இடத்தில் பொருள்களைச் சுற்றி திசுக்கள் மூடி வீக்கம் ஏற்படும்.
மூக்கில் நுண் கிருமிகள் தாக்கம் ஏற்படலாம். தொடர்ந்து காய்ச்சல், இருமல், சளியில் ரத்தம் கலந்து வருதல், மூச்சிறைப்பு போன்றவை ஏற்படலாம்.
சிகிச்சை

* உறுதியான சந்தேகம் கொண்டு உடனடியாகச் சிகிச்சை அளிக்க வேண்டும்.

* உடனடியாக மூச்சுக் குழாயைத் திறப்பதற்குத் தலையைச் சாய்த்து, தாடையை உயர்த்த வேண்டும்.

* ஏதாவது வெளிப்பொருள் கண்ணில் தென்பட்டால் அதை உடனடியாக வெளியே எடுக்க வேண்டும். பொருளை எடுக்க முடியாவிட்டால், குழந்தை சுயநினைவுடன் இருந்தால், சிறிய குழந்தைகள் (ஒரு வயதுக்குக் கீழ்) என்றால், குழந்தையைக் கையில் எடுத்து முதுகிலோ அல்லது நெஞ்சிலோ லேசாகத் தட்ட வேண்டும். ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு வயிற்றுப் பகுதியில் அழுத்த வேண்டும்.
அடைபட்ட பொருள் வெளியே வரும்வரை இப்படித் தொடர்ந்து செய்ய வேண்டும். ஒருவேளை குழந்தை மயக்கமாக இருந்தால் நேராகப் படுக்கவைத்து வயிற்றை அமுக்க வேண்டும். பிறகு, குழந்தையை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்று, சரியான சிகிச்சை அளிக்க வேண்டும்.
Source: Dinakaran