4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 070/116 செங்குன்றூர் மாலே ! வரவேண்டும் !

திருப்பதி - 64/108. மலை நாடு - 06/13 : திருச் செங்குன்றூர்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsவரவேண்டும் கண்டாய் , மதி கலங்கி விக்குள்
பொரவே உயிர் மாயும் போழ்து - பரமேட்டி !
செங்குன்றூர் மாலே ! சிறைப் பறவை மேல் கனகப்-
பைங்குன்று ஊர் கார் போல் பறந்து

பதவுரை :

பரமேட்டி பரம பதத்தில் இருப்பவனே !
செங்குன்றூர் மாலே திருச் செங்குன்றூரில் இருக்கும் திருமாலே !
மதி கலங்கி எனது அறிவு ஒடுங்கி ,
விக்குள் பொரவே விக்கல் துன்பம் செய்து ,
உயிர் மாயும் போழ்து எனது உயிர் நீங்கும்போது ,
சிறைப் பறவை மேல் இறகுகளை உடைய கருடன் மேல்
கனகப்பைங்குன்று ஊர் பசும்பொன் மயமான மலையின் மீது ஏறி வரும்
கார் போல் கரிய மேகம் போல்
பறந்து வரவேண்டும் விரைந்து வந்து , காட்சி தந்து அருள வேண்டும்

V.Sridhar