Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 071/116 திரு நாவ&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 071/116 திரு நாவ&#

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 071/116 திரு நாவாய் தேவனை என் நா வாய் வாழ்த்தும் !

    திருப்பதி - 65/108. மலை நாடு - 07/13 : திரு நாவாய்

    பறந்து திரிதரினும் பாவியேன் உள்ளம்
    மறந்தும் பிறிது அறிய மாட்டா ; சிறந்த
    திரு நாவாய் வாழ்கின்ற தேவனை அல்லால் , என்
    ஒரு நாவாய் வாழ்த்தாது உகந்து

    பதவுரை :

    பாவியேன் உள்ளம் தீவினை உடைய என் மனம்
    பறந்து திரிதரினும் விரைந்து அலையும் குணம் உடையது ஆயினும்
    மறந்தும் மறந்தாலும்
    பிறிது அறிய மாட்டா திருமாலை அல்லாமல் வேறு தெய்வத்தை நினைக்காது ;
    ஒரு நாவாய் நாவை உடைய என் வாயானது
    சிறந்த திரு நாவாய் வாழ்கின்ற மேம்பட்ட திரு நாவாயில் இருக்கும்
    தேவனை அல்லால் ஸ்ரீமன் நாராயணனை அல்லாமல் வேறு தெய்வத்தை
    வாழ்த்தாது உகந்து விரும்பி துதிக்காது

    V.Sridhar
    Last edited by sridharv1946; 13-11-13, 21:28.
Working...
X