4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 079/116 பூங்கோவல் ஆயன் பொருள் அனைத்தும் !

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsதிருப்பதி - 73/108. நடு - 2/2 : திருக் கோவலூர்

தாமரையான் ஆதியாய்த் தாவரங்கள் ஈறு ஆன
சேம உயிரும் , செகம் அனைத்தும் - பூ மடந்தைக்கு
ஆம் கோ , அலாயுதன் பின்னா அவதரித்த
பூங்கோவல் ஆயன் பொருள்

பதவுரை :

தாமரையான் ஆதியாய் தாமரையில் இருக்கும் பிரமன் முதலாக
தாவரங்கள் ஈறு ஆன தாவரப் பொருள்கள் இறுதியாக உள்ள
சேம உயிரும் உலகில் உள்ள எல்லா உயிர்களும் ,
செகம் அனைத்தும் எல்லா உலகங்களும்
பூ மடந்தைக்கு ஆம் கோ தாமரையில் இருக்கும் திருமகளுக்குத் தலைவனும் ,
அலாயுதன் பின்னா கலப்பையை ஆயுதமாக உடைய பலராமனுக்கு தம்பியாய்
அவதரித்த அவதரித்த
பூங்கோவல் ஆயன் திருக்கோவலூரில் இருக்கும் ஆயனாரது
பொருள் படைப்புப் பொருள்களே ஆகும்**********************************************
நடு நாட்டுத் திருப்பதி முற்றிற்று

**********************************************
--
V.Sridhar