Announcement

Collapse
No announcement yet.

திரு கார்த்திகை தீபம்; ----------------------------

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு கார்த்திகை தீபம்; ----------------------------

    திரு கார்த்திகை தீபம்;
    ------------------------------

    தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. அக்னி ரூபாமாய் போற்றப்படும் சிவனுக்கும், அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம் பக்தர்களால் போற்றப்படுகிறது.

    சூரியனின் நகர்வைக் கொண்டே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. சித்திரை மாதத்தில் சூரியன் தன் உச்சவீடான மேஷத்தில் பிரவேசம் செய்வது தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.

    இதன் பின்னர் சூரியன் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளைக் கடந்து தன் நீச்ச வீடான துலாத்திற்கு வந்து விடுவார். நீச்ச வீடு வரும் போது சூரியன் தன் பலத்தை இழந்து விடுவார். பின்னர் மீண்டும் தன் உச்ச ராசியான மேஷத்திற்குச் செல்ல, விருச்சிக ராசியில் இருந்து தன் ஏறுமுகமான பயணத்தைத் தொடங்குவார். அவ்வாறு பயணம் செய்யும் போது ஒளிக் கடவுளான சூரியனுக்கு மரியாதை செய்யும் விதமாக கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று தீபங்கள் ஏற்றி வழிபடுகிறோம்.

    கார்த்திகை நட்சத்திரத்திற்கான அதிபதி சூரியன். அதனால்தான் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தன்று விளக்கேற்றி வழிபடுவது சிறப்பான விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அத்துடன் பெரும்பாலான கோயில்களிலும், வீடுகளிலும் கார்த்திகை மாதம் முழுவதும் மாலை விளக்கேற்றி வைக்கும் பழக்கமும் உண்டு.

    திருக்கார்த்திகை திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்குத் திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்குத் திசை நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலும். எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.

    தீபத்திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றவேண்டும். வீட்டுவாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது நல்லது. கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும்.

    வரும் 17-11-2013(கார்த்திகை 1-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை திரு கார்த்திகை தீப நாளாகும்

    Click image for larger version

Name:	Karthigai.jpg
Views:	1
Size:	43.3 KB
ID:	35439



    அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
Working...
X