Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 081/116 புயங்கத

Collapse
This topic is closed.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 081/116 புயங்கத

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 081/116 புயங்கத்து நடமிட்ட அட்ட புயங்கத்தாற்கு ஆள் ஆகு !


    திருப்பதி - 75/108. தொண்டை - 2/22 : திரு அட்ட புயங்கம்


    என்றும் துயர் உழக்கும் ஏழைகாள் ! நீங்கள் இளங்-
    கன்று போல் துள்ளிக் களித்து இரீர் - அன்று நடம்
    இட்ட புயங்கத்து இரு சரணமே சரண் என்று
    அட்ட புயங்கத்தாற்கு ஆள் ஆய்

    பதவுரை :

    என்றும் துயர் உழக்கும் எப்போதும் வருந்துகின்ற
    ஏழைகாள் அறிவில்லாத மக்களே !
    அன்று புயங்கத்து முன்பு காளிங்கன் எனும் பாம்பின் மீது
    நடம் இட்ட நடனம் ஆடிய கண்ணனுடைய
    இரு சரணமே சரண் என்று இரு திருவடிகளே தஞ்சம் எனறு
    அட்ட புயங்கத்தாற்கு திரு அட்ட புயங்கத்தில் இருக்கும் திருமாலிற்கு
    ஆள் ஆய் அடிமைப் பட்டு

    நீங்கள் இளங்கன்று போல் இளம் கன்று போல் பயம்இல்லாமல்
    துள்ளிக் களித்து இரீர் துள்ளிக் குதித்து மகிழ்ந்திருங்கள் !





    --
    V.Sridhar
    Last edited by sridharv1946; 15-11-13, 20:46.
Working...
X