Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 083/116 வேளுக்க&am

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 083/116 வேளுக்க&am

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 083/116 வேளுக்கை ஆள் அரியின் தாளுக்கு ஆள் ஆகு !

    திருப்பதி - 77/108. தொண்டை - 4/22 : திரு வேளுக்கை

    தனக்கு உரியனாய் அமைந்த தானவர் கோன் கெட்டான் ;
    உனக்கு உரியன் ஆய மைந்தன் உய்ந்தான் , - நினைக்குங்கால்
    வேளுக்கை ஆள் அரியே !வேறு உதவி உண்டோ , உன்
    தாளுக்கு ஆள் ஆகாதவர்க்கு

    பதவுரை :

    வேளுக்கை ஆள் அரியே திரு வேளுக்கையில் இருக்கும் நர சிம்ஹனே !
    தனக்கு உரியனாய் அமைந்த தானே தெய்வம் என்றிருந்த
    தானவர் கோன் கெட்டான் அசுர ராஜன் ஹிரண்யன் அழிந்தான் ;
    உனக்கு உரியன் ஆய உனக்கு அடிமை ஆன
    மைந்தன் உய்ந்தான் அவன் மகன் பிரஹ்லாதன் நல வாழ்வு பெற்றான் ;
    நினைக்குங்கால் ஆலோசிக்கும்போது
    உன் தாளுக்கு ஆள் ஆகாதவர்க்கு உனது திருவடிகளுக்கு அடிமை ஆகாதவர்க்கு
    வேறு உதவி உண்டோ வேறு துணை உண்டோ ? (இல்லை)




    --
    V.Sridhar
Working...
X