4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 084/116 திருப்பாடக மால் செய்கை மார்பிருப்பாள் உரையாலே !

திருப்பதி - 78/108. தொண்டை - 5/22 : திருப் பாடகம்

தவம் புரிந்த சேதனரை , சந்திரன் , ஆதித்தன் ,
சிவன் , பிரமன் , இந்திரனாச் செய்கை - உவந்து ,
திருப் பாடகம் மருவும் செங்கண் மால் - தன மார்பு
இருப்பாள் தகவு உரையாலே

பதவுரை :

திருப் பாடகம் மருவும் திருப்பாடகத்தில் இருப்பவரும் ,
செங்கண் மால் உவந்து சிவந்த கண்களை உடையவருமான திருமால் உள்ளம் மகிழ்ந்து
தவம் புரிந்த சேதனரை தன்னை நோக்கித் தவம் செய்த ஆன்மாக்களை
சந்திரன் , ஆதித்தன் சந்திரன் , சூரியன் ,
சிவன் , பிரமன் சிவன் , பிரமன் ,
இந்திரனாச் செய்கை இந்திரன் ஆகும்படி அருள் செய்வது
தன மார்பு இருப்பாள் தனது திருமார்பில் இருக்கும் திருமகளின்
தகவு உரையாலே பரிவுரையாலே ஆகும் .
V.Sridhar

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends