மழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு.

மழையை விரும்பாதோர், ரசிக்காதோர் யாரும் இருக்க முடியாது. ஆனால், மாநகரப் போக்குவரத்து நெரிசலில், மேடு பள்ளமான சாலையில் வாகனம் ஓட்டுவதே சிரமம் என்ற நிலையில், மழை நேரத்தில், கூடுதல் அசவுகரியங் களும், விபத்து அபாயமும் சேர்ந்து கொள்கின்றன.

மழை நேரத்தில், வாகனம் ஓட்டும்போது, பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்...


மழை பெய்ய தொடங்கும், முதல் சில மணி நேரங்கள், வாகன ஓட்டிகளுக்கு மிகவும் ஆபத்தானவை. சாதாரண நாட்களில், என்ஜின் ஆயில், கிரீஸ் ஆகியவை சாலையில் சிந்தி, படிந்திருக்கும். அதனுடன், மழை நீரும் சேரும்போது, சாலை மிகவும் வழுக்கலாகி விடும். தொடர்ந்து மழை பெய்யும்போது, இந்த வழுக்கல் நீங்கிவிடும் என்றாலும், ஆரம்பத்தில், கவனமாக இருப்பது அவசியம்.

ஈரமான சாலையில், சறுக்கி விழுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதால், மிதமான, சீரான வேகத்தில் செல்வதுடன், சாதாரண நாட்களைப் போல், மழை நேரத்தில், "பிரேக்' சிறப்பாகச் செயல்படுவதில்லை என்பதையும் ஞாபகத்தில் வையுங்கள்.

சற்று முன்பாகவும், வழக்கமான அழுத்தத்தை விட மெதுவாகவும், "பிரேக்'கை அழுத்துவது நல்லது. அது, உங்களுக்கும், உங்களுக்கு முன் உள்ள வாகனத்துக்கும் தூரத்தை அதிகரிப்ப தோடு, உங்களுக்குப் பின் வரும் வாகன ஓட்டிக்கு, நீங்கள், வண்டியை நிறுத்தப் போகிறீர்கள் என்ற எச்சரிக்கையை தரும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsமுன் செல்லும் வாகனத்துக்கும், உங்கள் வாகனத்துக்கும், 20-30 மீட்டர் இடைவெளி இருக்கட்டும். நெருக்கமாகச் சென்றால், அடுத்த வாகனத்தில் இருந்து அடிக்கும் தண்ணீர், உங்கள் பார்வையை மறைக்கக் கூடும்.

தண்ணீர் தேங்கிய சாலையில், போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டால், வாகனத்தை அணைக்காதீர்கள். என்ஜின் ஓடிக் கொண்டே இருக்கட்டும். தேங்கியிருக்கும் தண்ணீரின் அளவு தெரியாத நிலையில், சீராக, மெதுவாக வாகனத்தை ஓட்டுங்கள். இடையில் நிறுத்தாதீர்கள். நிறுத்தினால். 'எக்சாஸ்ட் குழாய்'க்குள் தண்ணீர் புகுந்து விடும்.

வளைவில் திரும்பும்போதும், சாலையில் ஒருபுறமாக ஒதுங்கும்போதும் 'இன்டிகேட்டர்களை' ஒளிர விடுவ துடன், வழக்கமான வேகத்தை விட, மெதுவாகத் திரும்புங்கள்.

திறந்திருக்கும், பாதாளச் சாக்கடை மூடியில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க, சாலையின் மத்தியில் செல்லுங்கள். உங்களுக்கு முன் செல்லும் வாகனத்தை, பின்பற்றிச் செல்வது சிறந்தது.


வாகனம் நின்றுவிட்டால் பயந்துவிடாதீர்கள். நான்கு சக்கர வாகனம் என்றால், அடுத்தவர்களின் உதவியைப் பெற்று, சாலையின் ஓரமாக ஒதுக்கி, 'ஹெல்ப் லைனுக்கு' அழையுங்கள். இரண்டு சக்கர வாகனம் என்றால், வண்டியில் எப்போதும், 'டூல் கிட்' வைத்திருப்பது அவசியம்.
கடைசியாக, பாதசாரிகள் மீது, தண் ணீரைச் சிதறடித்துச் செல்லாதீர்கள். இரக்கத்தோடு நடந்துகொள்ளுங்கள்.

- ஐடியா அம்புஜம்.

http://www.dinamalar.com/Supplementary_detail.asp?Id=17945&ncat=10