Announcement

Collapse
No announcement yet.

காஞ்சி மடத்தில் நடந்த சுவையான நிகழ்ச்சி.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • காஞ்சி மடத்தில் நடந்த சுவையான நிகழ்ச்சி.

    காஞ்சி மடத்தில் நடந்த சுவையான நிகழ்ச்சி.

    ஒரு முறை சௌகந்திகம் என்னும் தேவலோக மலரைப் பறிப்பதற்காக பீமன் சென்றபோது வழியில் அனுமார் வயதான குரங்கின் வடிவத்தில் தன்னுடைய வாலை நீட்டிப் படுத்திருந்தார். அவர் அனுமார் என்று அறியாத பீமன் அந்த குரங்கின் வாலை அப்புறப்படுத்த நினைத்தபோது அது முடியவில்லை. அதற்குக் காரணம் அனுமார் தன்னுடைய வாலில் உள்ள பஞ்ச பூத சக்திகளை ஸ்தம்பனம் செய்து வைத்ததே ஆகும்.

    அதே போல காஞ்சி மடத்தில் நடந்த சுவையான நிகழ்ச்சி.

    காஞ்சி மாமுனி சங்கராச்சாரியார் அவர்கள் நூறு வயதை அடைந்தபோது அவருடைய நடமாட்டம் குறைந்து போனதால் குளித்தல் போன்ற நித்திய அனுஷ்டானுங்களுக்காக அவரை மற்றவர்கள் சுமந்து சென்று வேறு இடத்தில் வைத்துக் கொண்டிருந்தனர்.

    ஒவ்வொரு முறை அவரை மற்றோர் இடத்திற்கு மாற்றும்போது அவரை சாஷ்டாங்கமாக வணங்கி அவரிடம் அனுமதி பெற்ற பின்னரே அவர் திருமேனியைத் தூக்குவது வழக்கம். ஒரு முறை ஏதோ அசிரத்தை காரணமாக அவரிடம் அனுமதி கேளாமல் அவர் திருமேனியைத் தூக்க முயற்சித்தபோது அது இயலவில்லை. வழக்கமான இருவருக்கும் பதிலாக நான்கு பேர் சேர்ந்து முயற்சி செய்தும் முடியாமல் போகவே, சிறிது நேர யோசனைக்குப் பின்னர் தங்கள் தவறை உணர்ந்து அவரிடம் விழுந்து வணங்கி மன்னிப்புக் கோரினர். கண் சாடையால் அவர்களை மன்னித்து தன் திருமேனியைத் தொட அனுமதி வழங்கினார். அதன் பின்னர் அவரை வேறு இடத்திற்கு மாற்ற முடிந்தது.

    ... ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள்
Working...
X