குழந்தைகளை உயரத் தூக்கிப் போட்டு விளையாடாதீர்கள்.


Click image for larger version. 

Name:	toss up.jpg 
Views:	6 
Size:	15.9 KB 
ID:	1548Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsயாரும் அப்படிச் செய்வதைப் பார்த்தால், அது தவறென்று எடுத்துச் சொல்லுங்கள்.

உங்கள் கை தவறாது. ஒன்டே மற்றும் டெஸ்ட் மாட்சுகளில் நீங்கள் ஒரு பந்தைக் கூட தவறாது பிடித்து விடும் சாதனை வீரராக இருக்கலாம்.

ஆனால், கை தவறாது குழந்தையைப் பிடித்து விடுவது மட்டுமே இங்கு ஒரே காரணி அல்ல. இந்த விளையாட்டால் பல பிரச்சினைகள் உருவாகக் கூடும்.

முதலில் தூக்கிப் போடும்போது குழந்தை சிரிப்பது மகிழ்ச்சியால் அல்ல. அச்சத்தால் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அச்சம் வாழ்நாள் முழுதும் அதன் மனதில் உறைந்து விடும் ஆபத்து உண்டு.

சிறு குழந்தையின் தலை கனமானது. அதன் உடலுக்கு இன்னும் சரியான விகிதத்தில் அமையப் பெறாதது. அதன் கழுத்தும், நரம்புகளும் இன்னமும் தளர்வாகவும், மெல்லியதாகவும். அவ்வளவாக வலிமை பொருந்தியில்லாமலும் இருக்கும்.

முரட்டுத்தனமாக தலை அசைவு ஏற்படும்போது அது கண் குருடாதல், மூளை இயக்கம் சேதமடைதல், வலிப்பு நிகழ்தல் போன்று வாழ்நாள் முழுதும் தொடரக் கூடிய பிரச்சினைகளுக்கு வழி வகுக்கலாம்.

நினைவிருக்கட்டும். உங்களுக்கு ஜாலியாகத் தோன்றுவது, அந்தக் குழந்தைக்கு மரண பயம்.

Source:yesses Bee