Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 099/116 திருக் க&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 099/116 திருக் க&#

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 099/116 திருக் கடல் மல்லைக்குள் தஞ்சம் என்று திரி !

    திருப்பதி - 93/108. தொண்டை - 20/22 : திருக் கடல் மல்லை

    செறிந்த பணை பறித்து , திண் களிற்றைச் சாடி ,
    முறிந்து விழப் பாகனையும் மோதி - எறிந்து ,
    தருக்கு அடல் மல்லைக் குமைத்தான் தஞ்சம் என்று நெஞ்சே !
    திருக் கடல் மல்லைக்குள் திரி

    பதவுரை :

    நெஞ்சே ! எனது மனமே !
    செறிந்த பணை பறித்து நெருங்கிய தந்தங்களைப் பிடுங்கி ,
    திண் களிற்றைச் சாடி வலிய குவலையாபீடம் எனும் யானையை அடித்துக் கொன்று ,
    முறிந்து விழப் பாகனையும் மோதி அதன் பாகனும் இறந்து விழும்படி அடிதது ,
    எறிந்து கீழே தள்ளி ,
    தருக்கு அடல் மல்லை செருக்கான வலிய மல்லர்களை
    குமைத்தான் தஞ்சம் என்று போரிட்டுக் கொன்ற திருமாலே சரணம் என்று
    திருக் கடல் மல்லைக்குள் திரி திருக்கடல் மல்லைக்குள் சென்று திரிவாயாக


    V.Sridhar
    Last edited by sridharv1946; 22-11-13, 19:39.
Working...
X