இப்போது தாராளமாக கிடைக்கும் கொய்யாப்பழம் ஓர் நல்ல பழம்.
இதன் மருத்துவ குலங்களைப்பற்றி அறிவோமா?
வரதராஜன்கொய்யப் பழத்தின் மருத்துவ குணங்கள் - Health Benefits of Guava Fruit

இன்றைக்கு விற்கிற விலையில் பழங்கள் சாப்பிடுவது எல்லாம் நமக்கு கட்டுபடியாகுமா? என்ற நினைப்பு பலருக்கும் வருவது இயல்பு. காரணம் டாக்டர்கள் நம்மிடம் பழங்கள் சாப்பிடச் சொல்லி பரிந்துரைத்தாலே பருக்கும் நினைவிற்கு வருவது ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவைதான்.
முக்கியமானது. கொய்யா பச்சைப்பசேலென்ற நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம் வரை வளரும் கொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள் நறுநம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் மணத்துடன் காணப்படும் விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன உஷ்ணப் பிரதேசங்களில் அதிகமாக விளையும் கொய்யாப்பழங்கள் நல்ல நறுமணம் மற்றும் இனிப்புச் சுவையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது.

கொய்யாப் பழம், பப்பாளி போன்ற குறைந்த விலையில் எளிதாய் கிடைக்கும் பலன்களை பற்றிய நினைப்பு வருவதே இல்லை. இவற்றின் விலை தான் குறைவே தவிர, சத்துக்களில் இவை எந்த குறையும் வைப்பதில்லை என்பதை நாம் உணர வேண்டும்.

பெரிய காய்கறி கடைகள், பழக்கடைகள் என்றில்லாமல் சாதரணமாக பிளாட்பார ஓரத்தில், தள்ளுவண்டிகளிலேயே இவற்றை வாங்கலாம். வீட்டிலிருக்கும் சிறிய இடத்தில கூட இவற்றை விளைவிக்கலாம். இந்தக் கொய்யாவில் அப்படி என்னதான் இருக்கு என்கிறீர்களா?

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsதொடர்ந்து படியுங்கள்....

கொய்யாவில் சிவப்பு, வெள்ளை என இரு வகைகள் உள்ளன. நெல்லிக்காய்க்கு அடுத்து கொய்யாவில் தான் அதிக வைட்டமின் சி உள்ளது. நார்ச்சத்து அதிகம் கொண்ட கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ போன்ற சத்துக்களுடன் போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களும் உள்ளன.

நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலுக்கு எளிய தீர்வை தருகிறது. ஒரே நாளில் மலச்சிக்கலைத் தீர்க்கும் வல்லமை கொண்டது கொய்யா. தொப்பையை குறைக்கும். அமிலத்தன்மை, நெஞ்சு எரிச்சல், புளியேப்பத்திற்கு தீர்வளிக்கும்.

வைட்டமின்களும், தாதுச்சத்துக்களும் நிறைந்துள்ளதால் சருமம் பொலிவு பெரும். மினுமினுப்புக் கூடி, தோல் சுருக்கம் குறையும். கண் கோளாறுகள் விலகும். இது உடம்பிற்கு குளிர்ச்சியைக் கொடுக்ககூடியது.

பொட்டசியச் சத்து ரத்த அழுத்தத்தை சீராக்கும். மெக்னீசியம் நரம்புத்தளர்ச்சியை போக்கும். இதிலுள்ள வைட்டமின் சி சளித்தொல்லையைப் போக்கும். இருமலுக்கு விடை கொடுக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். வாயுத்தொல்லைக்கு தீர்வளிப்பதுடன் வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றிலிருந்தும் நிவாரணம் அளிக்கும். கொழுப்புச் சத்து குறைவான பழம் என்பதால் பசியை கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது. அருமையான கனிச்சாறு கொண்டுள்ளதால் குடல் புண்ணை ஆற்றும் வல்லமை கொண்டது.

கொய்யாப்பழம் மட்டுமல்லாமல், கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை போன்றவற்றிலும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளிலிருந்து குணப்படுத்தும். கொய்யா மர இலைகளை அரைத்துத் தடவினால் காயம், புண் போன்றவை விரைவில் ஆறும். இலைகள் அல்சர், பல்வலிக்கு சிறந்த மருந்தாகும். கொய்யா இலையைக் கொண்டு தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை, இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வளிக்கிறது. இளம் கிளைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலை குணப்படுத்தும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் மந்தம், காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளை குணமாக்குகிறது. கொய்யா மரத்தின் பகுதிகளுடன், மேலும் சில பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் கஷாயத்தால் பிரசவத்திற்குப்பின் வெளியாகும் கழிவுகள் எளிதாக வெளியேறும் என்கிறது சித்த மருத்துவம்.

100 கிராம் கொய்யாப் பழச்சாறில் கிடைக்கும் சத்துக்கள்

1. நீர் - 76%
2. மாவுப்பொருள் - 15%
3. புரதம் - 1.5%
4. கொழுப்பு - 0.2%
5. கல்சியம் - 0.01%
6. பாஸ்பரஸ் - 0.04%
7. இரும்புச்சத்து - 1 யூனிட்
8. வைட்டமின் - 300 யூனிட்

கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன குடல் வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன


கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலி நீங்கவும் உதவுகின்றன


கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இருதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்

கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம் இழுப்பு, காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது
கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்