இந்த மொபைல் படுத்தும் பாடு!? :
சர்வ வ்யாபியாக இருக்கும் இந்த செல் ஃபோன் நமக்கு இன்று உபகாரமாகத்தான் இருக்கு. இது எல்லோருமறிந்ததே.
ஆனால் சில நேரங்களில் அதை தவறாக பயன்படுத்தும்போது ஏற்படுகின்ற இடைஞ்சல்களும், உபத்ர்வங்களும்
ஏராளம்.
* டூ வீலர் வண்டி ஓட்டும்போதும் பேச்சு.
* சாலையில் சிக்னலை நடந்து க்ராஸ் செய்யும்போதும் கூட இதை கைவிட முடியவில்லை சிலரால். ஜாலியாக பேசிய வண்னம் தொடர்ந்து பேச்சு. மற்ற கார் ஓட்டுனர்களும், மற்றவர்களும் இவர்களை கண்டு நடுங்க வேண்டியுள்ளது.
இதில் ஒரு பல வினோதமான காமெடி காட்சிகளையும் நாம் அனுபவிக்க தவறுவதில்லை. உதாரணத்திருக்கு, மனைவி
பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டே செல் ஃபோனை கணவரது வாய் அருகில் எடுத்துச்செல்ல அவரோ வண்டி ஓட்டிக் கொண்டே உரையாடிக் கொண்டிருப்பார். சில நேரங்களில் அவர்களுடன் ஒன்றிரண்டு குழந்தைகளும் பயணம்.
இப்படி பல அனுபவங்கள்! அதிலும் உலகத்தை மறந்து உறையாடல். இந்த மாதிரி காட்சிகள் பரவலாக பல ஊர்களில், பல இடங்களில் நாம் பார்த்து வருகின்றோம்.
இது நல்லதல்ல. பல விதமான விபரீதங்கள் ஏற்படலாம்.
இந்த வியாதி வைதீகத்தையும் விடவில்லை. அங்கு ஹோமமோ, பாரயணமோ, ஜபமோ நடைபெற்றுக் கொண்டடிருக்கும். கர்த்தா ஆச்சார்ய வர்ணம் (பவர் ஆஃப் அட்டார்ணி) வாத்தியாரிடம் கொடுத்த பிறகு கவலைப் படாமல் ஃபோன் பெசிகொண்டிருப்பார். அந்த சடங்கு தன் குடும்பத்தின் க்ஷேமத்திக்குத்தான் நடைபெறுகின்றது என்ற நினைப்பில்லாமல்!
வைதீகாளிலும் சிலர் இப்போதெல்லாம் ஃபோன் பேசுவதை ஆங்காங்கு கார்யத்தின் நடுவில் அவ்வப்போது பார்க்கத்தான் செய்கின்றோம்.
எல்லோரையும் குறை சொல்லக்கூடாது:
சரி, எல்லா கர்த்தாக்களும் அப்படியா? எல்லா வைதீகாளும் அப்படியா? நிச்சயம் அல்ல. கார்யம் ஆரம்பித்தவுடன் தங்களது செல் ஃபோனை சைலண்ட் மோடில் போட்டுவிட்டு நிகழ்ச்சி முடிந்ததும் செல்லை ஆன் செய்யும் கர்த்தாக்களும், வைதீகாளும் ஏராளம். பல சாஸ்திரிகள் இன்று இதில் மிக கவணமாக இருக்கின்றனர். இது கண்கூடு. கூட வந்தவர்கள் ஃபோனை சைலண்ட் மோடில் போட்டுவிட்டார்களா என்று கவணித்து வருகின்றனர்.
செல் ஃபோன் மாதிரி இன்றைய நவீன கருவிகளையும், வசதிகளையும் உபயோகப்படுத்துவதில் தவறேதும் இல்லை. ஆனால் அவை நமக்கு இடைஞ்சல்களாக மாற நாம் அனுமதிக்கக் கூடாது.

Sarma sasthrikalDear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends