டியர் டாக்டர் சடகோபன் ஸ்வாமின்,
இராமானுஜரைப் பற்றி படித்துக் கொண்டிருந்தேன் .சில நிகழ்சிகள் என் மனத்தை ஈர்த்தது.

'மாரிக்கடல்வளை வணர்க்கிளையவன் வரைபுரை திருமார்பில்
தாரினாசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்தது ஓர் துணை காணேன்
ஊரும்துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பி இயங்கும்
தேறும் போயிற்று திசைகளும் மறைந்தன செய்வது ஓன்று அறியேனே " பெரிய திருமொழி 8 .5 .2

இராமனுசர் அருமை சீடரான உறங்காவல்லி தாசர் நீச்ச குலத்தில் பிறந்திருந்தும் அவரை
மிகவும் பிடிக்கும். அவருக்கு பொன்னாச்சி என்ற பெண்ணை மணம் செய்து வைத்தார்.
அவர்கள் இருவரையும் வைணவத்திற்கு திருப்பி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார்
அந்த தாசர் ஒரு நாள் மறைந்த போது கூரேசன் புதல்வர் பராச பட்டரை அந்திமகிரியை
செய்யுமாறு கட்டளை இட்டார். வில்லிதாசன் உடல் விமானம் போல் அலங்கரித்து,
ஏகாந்திகளும், பாகவதர்களும் மாறி மாறி தோள் கொடுக்க தூக்கிக்கொண்டு போனார்கள்.
இதை பார்த்துக் கொண்டிருந்த பொன்னாச்சி மயங்கி விழுந்தாள், அவள் உயிரும் போனது.
உடையவர் கட்டளைப் படி அவளது உடலும் வில்லிதாசன் பக்கதிலேயே அடக்கம் பண்ணப்
பட்டது. "தேறும் போயிற்று திசைகளும் மறைந்தன செய்வது அறியேனே " என்பது
இந்த கதை தான் என்று வ்யாக்காதார் கூறுவர்.

ஒழிவில் காலமெல்லாம் என்னும் திருவாய்மொழி பாசுரத்திற்கு பொருள் கூறும் போது
'சிந்துபூமகிழும் திருவேங்கடம் " என்ற தொடருக்கு அர்த்தம் அளிக்கும் போது யாரேனும்
திருவேங்கடத்தில் நந்தவனம் அமைத்து திருமாலை கட்ட உண்டோ? என்றவுடன்
அவரது சீடரான அனந்தாழ்வார் "தேவரீர் கட்டளை இட்டால் " என்றாராம்
அவரும் நந்தவனம் அமைத்து "இராமனுசர்" என்று பெயரிட்டு தொண்டு செய்து
வந்தாராம். ஒரு முறை இராமனுசர் திருமலை யாத்ரியின் போது அந்த நந்தவனத்தை
கண்டு மகிழ்ந்து தன் சிஷ்யரை தழுவிக் கொண்டாராம்.
உடனே அவருக்கு வந்த பாசுரம் திருநெடுந்தாண்டகம்
முளைக்கதிரை என்று தொடங்கி ..........வளர்த்ததனால் பயன் பெற்றேன் " என்பதுதான்

மற்றும் ஒரு நிகழ்ச்சி: இறைவனுக்கு பதிலாக இறைவனைப் பாடிய ஆழ்வாரின் மீது
காதல் பொங்குகிறது. தான் வளர்த்த கிளியிடம் நாயகனான குலசேகரன் என்னும்
பெயரை கூறுமாறு கொஞ்சுகிறார்.அவரது கொஞ்சலுக்கு இறங்கி இந்த தனியன்
பிறந்தது அதுவே பெருமாள் திருமொழிக்கு தனியன் என்று அறிக.

இன்னமுது மூட்டுகேன் இங்கே வா பைங்கிளியே
தென்னரங்கம் பாடவல்லசீர்பெருமாள் பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள்
குலசேகர் என்றே கூறு

கிளியை எப்படியெல்லாம் பயன் படுத்தி இருக்கிறார்கள் அழ்வார்கள்

அடியேன்,
நொச்சலூர் சேஷாத்ரி சம்பத்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends