4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 113/116 திருப் பாற்கடலான் அடியார் அடியார்க்கு இடரிலை


திருப்பதி - 107/108 வடநாடு - 12/12 : திருப் பாற்கடல்


தொழும்பு ஆய நான் நல்ல சூது அறிந்து கொண்டேன்
செழும் பாய் அலை முத்தம் சிந்தி முழங்கும்
திருப் பாற்கடலான் தாள் சேர்ந்தார் அடி சேர்ந்-
திருப்பார்க்கு அடல் ஆம் இடர்


பதவுரை :


தொழும்பு ஆய நான் எம்பெருமானுக்கு அடியவனான நான்
நல்ல சூது அறிந்து கொண்டேன் நல்ல உளவை அறிந்து கொண்டேன்
செழும் பாய் அலை செழித்துப் பாய்கின்ற அலைகளினால்
முத்தம் சிந்தி முழங்கும் முத்துக்களைகே கொழித்து , முழங்கும்
திருப் பாற்கடலான் திருப்பாற்கடலில் இருக்கும் திருமாலின்
தாள் சேர்ந்தார் திருவடிகளை உபாயமாக அடைந்த பக்தர்களது
அடி சேர்ந்திருப்பார்க்கு திருவடிகளைச் சேர்ந்து இருப்பவர்களுக்கு
அடல் ஆம் இடர் பிறவித் துன்பங்களை ஒழிப்பது எளிது--
V.Sridhar


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends