4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 114/116 வைகுந்தம் பெறுவார் சீர்சொல்ல எளிதோ ?

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsதிருப்பதி - 108/108 திரு நாடு - 1/1 : பரம பதம்

இடர் உடையேன் சொல்ல எளிதோ? பிரமன்
அடரும் விடையோற்கும் அரிதே - தொடரும்
கரு வைகும் தம் பிறவி கட்டு அறுத்து , மீளாத்-
திருவைகுந்தம் பெறுவார் சீர்

பதவுரை :

தொடரும் வினைப் பயன் காரணமாகத் தொடர்ந்து வருவதும் ,
கரு வைகும் கருவில் பிரவேசிப்பதற்குக் காரணமுமான
தம் பிறவி கட்டு அறுத்து தமது பிறவிப் பந்தத்தை ஒழித்து ,
மீளாத் திருவைகுந்தம் திரும்பி வர முடியாத ஸ்ரீ வைகுண்டத்தை
பெறுவார் சீர் அடைபவர்களது சிறப்பை
பிரமன் பிரமனும் ,
அடரும் விடையோற்கும் போர் புரியும் எருதை வாகனமாக உடைய சிவனும்
அரிதே சொல்ல முடியாது என்றால்
இடர் உடையேன் இவ்வுலகில் துன்பப்படும் நான்
சொல்ல எளிதோ விவரிக்க முடியுமோ ?

V.Sridhar