Announcement

Collapse
No announcement yet.

'க' ஸித்தியளிப்பது

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 'க' ஸித்தியளிப்பது

    'க' ஸித்தியளிப்பது
    'க' என்பது ஸித்தி தருவது. ஸித்தி என்றால் லட்சியத்தை ஸ்திரமாக ஸாதித்துக் கொள்வது. எந்த வித்யையைக் கற்றுக் கொண்டாலும் அதன் லட்சியத்தைப் பிடித்து, எந்நாளும் நழுவாமல் தக்க வைத்துக் கொள்வது ஸித்தி.


    'க' (ga) - காரத்திற்கு ரொம்பவும் உத்கர்ஷம் (உயர்வு) உண்டு. புணர்ஜன்மா இல்லாமல் பண்ணிக் கொள்வதற்கு, அதாவது மோட்சம் அடைவதற்கு க (ga) - வில் ஆரம்பிக்கும் நாலு பேரை ஹ்ருதயத்திலே ஸ்மரித்தால் போதும். என்ன அந்த நாலு?



    கீதா கங்கா ச காயத்ரீ கோவிந்தேதி ஹ்ருதி ஸ்திதே


    கீதை, கங்கை, காயத்ரீ, கோவிந்தன் என்று 'க'காரத்தில் ஆரம்பிக்கிற நாலு பேர்கள்தான். வடக்கத்திக்காரர்களிடம், கார்த்தாலே எழுந்தவுடனே இந்த நாலு பேரைச் சொல்கிற வழக்கம் இருக்கிறது. இங்கே பிறவிப் பயன் என்ற ஜீவித ஸித்தியாகிய பிறவாமையைத் தருகிற நாலே 'க'வில் ஆரம்பிப்பதாகச் சொல்லியிருக்கிறது.

    ஸ்ரீ மஹாபெரியவா
Working...
X