சிறுநீரகம் தொடர்பான வியாதிகள் இப்போது அதிகம் உருவாகின்றன.
அவை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
வீட்டிலே அதற்கான வைத்தியம் செய்ய முடியும்.
வாழைத்தண்டு எப்படி உபயோகமாகிறது பார்ப்போம்.
வரதராஜன்


"சிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு...!

*சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர ்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது . உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுக ின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவ தாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர
உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

* சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends* சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.

* வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.

* வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

* வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்க ு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

* உடலைக் குளிர்ச்சியடையவ ைக்கும் தன்மையிருப்பதால ் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது. <

உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்
======================================================================