Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 116/116 அழகிய மண

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 116/116 அழகிய மண

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 116/116 அழகிய மணவாள தாசன் அந்தாதி முடித்தான் !

    தற்சிறப்புப் பா/யிரம் 2/2


    பதின்மர் உரைத்த பதி ஒரு நூற்றெட்டும்
    துதி செய்ய அந்தாதி சொன்னான் - அதிக
    குணவாள பட்டர் இரு கோகனகத் தாள் சேர்
    மணவாள தாசன் வகுத்து

    பதவுரை :

    அதிக குணவாள பட்டர் மிக்க நற்குணங்கள் கொண்ட பெரிய பட்டரது
    இரு கோகனகத் தாள் சேர் தாமரை போன்ற திருவடிகள் இரண்டையும் பற்றின
    மணவாள தாசன் அழகிய மணவாள தாசன்
    பதின்மர் உரைத்த ஆழ்வார்கள் பதின்மரும் மங்களாசாசனம் செய்த
    பதி ஒரு நூற்றெட்டும் திருமாலின் திருப்பதிகள் நூற்றெட்டினையும்
    துதி செய்ய தோத்திரம் செய்யுமாறு
    வகுத்து பிரித்துக் கொண்டு
    அந்தாதி சொன்னான் இந்த அந்தாதிப் பிரபந்தத்தைப் பாடினான்


    ************************************************************
    நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி முற்றிற்று
    ************************************************************



    --
    V.Sridhar
Working...
X