5. திருவரங்கத்து மாலை - 2/114 நாளும் தமியேனுக்குத் துணை வருவது யார் ?

சிறப்புப் பா/யிரம் 2/2

நாளும் பெரிய பெருமாள் அரங்கர் நகை முகமும் ,
தோளும் தொடர்ந்து என்னை ஆளும் விழியும் , துழாய் மணக்கும்
தாளும் , கரமும் , கரத்தில் சங்கு , ஆழியும் , தண்டும் , வில்லும் ,
வாளும் துணை வருமே தமியேனை வளைந்து கொண்டே ?

பதவுரை :

பெரிய பெருமாள் அரங்கர் பெரிய பெருமாள் எனப்படும் ஸ்ரீ ரங்க நாதனுடைய
நகை முகமும் புன்னகை புரியும் திரு முகமும் ,
தோளும் திருத்தோள்களும் ,
தொடர்ந்து என்னை ஆளும் விழியும் விடாது என்னை அடிமை கொள்ளும் திரு விழிகளும் ,
துழாய் மணக்கும் தாளும் துளசி வாசனை வீசும் திருவடிகளும் ,
கரமும் கரத்தில் திருக்கைகளும் , கரத்தில் சங்கு சக்கரமும் ,
சங்கு ஆழியும் பாஞ்ச ஜன்யம் எனும் சங்கும் , சுதர்சனம் எனும் சக்கரமும்
தண்டும் கௌமோதகீ எனும் கதையும் ,
வில்லும் சார்ங்கம் எனும் வில்லும் ,
வாளும் , நந்தகம் எனும் வாளும்
தமியேனை வளைந்து கொண்டே துணை இல்லாத அடியேனைச் சூழ்ந்து கொண்டு
நாளும் துணை வருமே எப்போதும் துணையாக வரும்

--
V.Sridhar

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends