Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 2/114 ஆழியில் துயிலும் ஆ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 2/114 ஆழியில் துயிலும் ஆ

    5. திருவரங்கத்து மாலை - 3/114 ஆழியில் துயிலும் ஆழியான் வாழி !


    திரு வாழி ! சங்கு , திரு ஆழி வாழி ! சிறந்த கொண்டல்
    உரு வாழி ! யோகத் திருத் துயில் வாழி ! உலகு அளந்த
    மரு ஆர் மது மலர்த் தாள் வாழி ! வாழி , வணங்கும் அன்பர்
    பெரு வாழ்வு அனைய பெருமாள் அரங்கப் பெரும் செல்வமே !

    பதவுரை :

    திரு வாழி திருமகள் வாழியவே !
    சங்கு திரு ஆழி வாழி ஸ்ரீ சங்கு சக்கரங்கள் வாழியவே !
    சிறந்த கொண்டல் உரு வாழி சிறந்த கார் மேகம் பொன்ற திரு மேனி வாழியவே !
    யோகத் திருத் துயில் வாழி சிறந்த யோக நித்திரை வாழியவே !
    உலகு அளந்த உலகங்களை இரண்டு அடியாக அளந்திட்ட
    மரு ஆர் மது மலர்த் தாள் வாழி மணமுள்ள , தேன் நிறைந்த திருவடி மலர்கள் வாழியவே !
    வணங்கும் அன்பர் வணங்குகின்ற பக்தர்களுக்கு
    பெரு வாழ்வு அனைய பெருமாள் பெரிய வாழ்க்கை போன்ற பெரிய பெருமாளுடைய
    அரங்கப் பெரும் செல்வமே வாழி திருவரங்கத்துப் பெரிய செல்வம் வாழியவே !


    V.Sridhar
    Last edited by sridharv1946; 26-11-13, 19:59.
Working...
X