Announcement

Collapse
No announcement yet.

கையில் காப்புக்கயிறு கட்டுவதன் பலன் என்&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கையில் காப்புக்கயிறு கட்டுவதன் பலன் என்&

    கையில் காப்புக்கயிறு கட்ட வேண்டிய தன் அவசியத்தை நம்மில் பலர் உணர்வதேயில்லை. ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிய வேண்டும். மஞ்சள், சிவப்பு, கருப்பு நிற மந்திரிக்கப்பட்ட கயிறுகள் நம்மை தீய சக்திகளிடமிருந்து காக்கும் ஒரு கவசமாக செயல்படும். பட்டுநூலினால் ஆன காப்புக்கயிறுகளை அணிவது அதிக பலன் தரும். குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் அணிய வேண்டும். பட்டு, தர்ப்பை, அருகம்புல் போன்றவை மந்திரங்களின் அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை.

    இது போலவே காப்புக்கயிறும் மந்திரங்களை ஈர்க்கும். நாம் அணியும் காப்புக்கயிறும் மந்திரங்களின் ஆற்றலை சேமித்து நம்மைக் காக்கும். மந்திரிக்கப்பட்ட எலுமிச்சங்கனியும் நம்மைக் காக்கும் ஆற்றல் கொண்டது. நாயுருவி, சீதெவிசெங்கழுநீர் , அருகம்புல் போன்ற சில மூலிகைகளின் வேரையும் இதுபோல் மந்திர உருவேற்றி அணிவார்கள். காசிக்கயிற்றில் முருகன், பிள்ளையார், சிவன், திருப்பதி போன்ற தெய்வங்களின் டாலர்களை கோர்த்து கழுத்தில் மாலையாகவும் அணிவதும் ஒரு வகையில் காப்பே.


    Source: Dinakaran

    ஆன்மிகம்
Working...
X