5. திருவரங்கத்து மாலை - 8/114 :வான் அளவும் தீர்க்கம் ஓர் ஏழ் இலக்கம் !

பாற்கடல் நால் எட்டு இலக்கம் இயோசனை ; பாற்கடலுள்
மால் கவி கோயில் அகலமும் ஈர் ஐந்து , வான் அளவும்
தீர்க்கம் ஓர் ஏழ் ; திகழ் பணி மூன்று ; சிறந்த அகலம்
ஏல் கவின் ஒன்றரை ; உத்தமர் நீளம் இரண்டரையே

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபதவுரை :

பாற்கடல் திருப் பாற்கடலின் நீளம்
நால் எட்டு இலக்கம் இயோசனை 32 லக்ஷம் யோசனையாம் .
பாற்கடலுள் மால் கவி கோயில் அதனுள் திருமாலைச் சுற்றி இருக்கும் கோயிலின்
அகலமும் ஈர் ஐந்து அகலமும் பத்து லக்ஷம் யோசனையாம் .
வான் அளவும் தீர்க்கம் ஓர் ஏழ் வான் அளாவும் கோயிலின் உயரம் ஏழு லக்ஷம் யோசனையாம்
திகழ் பணி மூன்று விளங்கும் திரு அனந்தாழ்வானது நீளம் 3 லக்ஷம் யோசனையாம்
சிறந்த அகலம் மேன்மையுள்ள ஆதி சேஷனின் அகலம்
ஏல் கவின் ஒன்றரை அழகுடைய ஒன்றரை லக்ஷம் யோசனை
உத்தமர் நீளம் இரண்டரையே புருஷோத்தமனான அரங்கன் நீளம் 2.1/2 லக்ஷம் யோசனை
--
V.Sridhar