Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 8/114 : வான் அளவும் தீர்க்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 8/114 : வான் அளவும் தீர்க்&#

    5. திருவரங்கத்து மாலை - 8/114 :வான் அளவும் தீர்க்கம் ஓர் ஏழ் இலக்கம் !

    பாற்கடல் நால் எட்டு இலக்கம் இயோசனை ; பாற்கடலுள்
    மால் கவி கோயில் அகலமும் ஈர் ஐந்து , வான் அளவும்
    தீர்க்கம் ஓர் ஏழ் ; திகழ் பணி மூன்று ; சிறந்த அகலம்
    ஏல் கவின் ஒன்றரை ; உத்தமர் நீளம் இரண்டரையே

    பதவுரை :

    பாற்கடல் திருப் பாற்கடலின் நீளம்
    நால் எட்டு இலக்கம் இயோசனை 32 லக்ஷம் யோசனையாம் .
    பாற்கடலுள் மால் கவி கோயில் அதனுள் திருமாலைச் சுற்றி இருக்கும் கோயிலின்
    அகலமும் ஈர் ஐந்து அகலமும் பத்து லக்ஷம் யோசனையாம் .
    வான் அளவும் தீர்க்கம் ஓர் ஏழ் வான் அளாவும் கோயிலின் உயரம் ஏழு லக்ஷம் யோசனையாம்
    திகழ் பணி மூன்று விளங்கும் திரு அனந்தாழ்வானது நீளம் 3 லக்ஷம் யோசனையாம்
    சிறந்த அகலம் மேன்மையுள்ள ஆதி சேஷனின் அகலம்
    ஏல் கவின் ஒன்றரை அழகுடைய ஒன்றரை லக்ஷம் யோசனை
    உத்தமர் நீளம் இரண்டரையே புருஷோத்தமனான அரங்கன் நீளம் 2.1/2 லக்ஷம் யோசனை




    --
    V.Sridhar

Working...
X