Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 9/114 : அடி அதலம் ; கடி வையம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 9/114 : அடி அதலம் ; கடி வையம்

    5. திருவரங்கத்து மாலை - 9/114 :அடி அதலம் ; கடி வையம் ; முடி அண்ட முகடு !

    அடித் தலம் அந்த அதலம் ; பொரு திரை ஆழி வையம்
    கடித் தலம் , நேமிக்கிரி , உடை ஆடை - கபாலி முன் நாள்
    மிடித்து அலமந்தது ஒழித்தான் ; அரங்கன் - விழி இரு கோள் ,
    முடித் தலம் அண்ட முகடு ; இனி யாம் என் மொழிவதுவே ?

    பதவுரை :

    முன் நாள் கபாலி முற்காலத்தில் சாபத்தினால் பிரம்ம கபாலத்தை ஏந்திய சிவன்
    மிடித்து அலமந்தது வறுமையுற்று அலைந்து திரிந்து வருந்தியதை
    ஒழித்தான் அரங்கன் போக்கியருளிய அரங்க நாதனுடைய
    அடித் தலம் அந்த அதலம் திருவடிகள் இருக்குமிடம் அதல லோகம் ;
    கடித் தலம் பொரு திரை ஆழி வையம் இடுப்பு அலைகள் மோதும் கடல் சூழ்ந்த பூமி ;
    உடை ஆடை நேமிக்கிரி உடுத்தும் ஆடை சக்ரவாள பர்வதம் ;
    விழி இரு கோள் கண்கள் சூரியனும் சந்திரனும் ;
    முடித் தலம் அண்ட முகடு திருமுடி அண்ட கோளத்தின் உச்சி ;
    இனி யாம் என் மொழிவதுவே இனி நான் அவன் உருவைப் பற்றி என்ன சொல்ல ?

    V.Sridhar

Working...
X