Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 11/114 : அரங்கனுக்கு அனைத்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 11/114 : அரங்கனுக்கு அனைத்&#

    5. திருவரங்கத்து மாலை - 11/114 :அரங்கனுக்கு அனைத்தும் ஆயிரம் !

    புரம் ஆயிரம் , திருக்கண் மலர் ஆயிரம் , புண்டரிகக்-
    கரம் ஆயிரம் , கழல் கால் மலர் ஆயிரம் , கண்ணி முடிச்-
    சிரம் ஆயிரம் , திரு நாமமும் ஆயிரம் , - செய்ய கையில்
    அரம் ஆயிரம் கொண்ட திண் திறல் ஆழி அரங்கர்க்கே

    பதவுரை :

    செய்ய கையில் சிவந்த வலத் திருக் கையில்
    அரம் ஆயிரம் கொண்ட ஆயிரம் அரங்களைக் கொண்ட
    திண் திறல் ஆழி அரங்கர்க்கே மிக்க வலிமையான சக்கராயுதம் ஏந்தும் ரங்கா நாதருக்கு
    புரம் ஆயிரம் திருமேனி ஆயிரம் ;
    திருக்கண் மலர் ஆயிரம் செந்தாமரை போன்ற கண்கள் ஆயிரம் ;
    புண்டரிகக்கரம் ஆயிரம் செந்தாமரை போன்ற திருக்கைகள் ஆயிரம் ;
    கழல் கால் மலர் ஆயிரம் வீரக் கழல் அணிந்த தாமரை பொன்ற திருவடிகள் ஆயிரம் ;
    கண்ணி முடிச்சிரம் ஆயிரம் மலர்மாலையும் கிரீடமும் தரித்த திருமுடிகள் ஆயிரம் ;
    திரு நாமமும் ஆயிரம் திருப் பெயர்களும் ஆயிரம் .

    V.Sridhar

Working...
X