காமாட்சியை வணங்கினால் கிரகதோஷம் இல்லை!

Click image for larger version. 

Name:	Kamakshi.jpg 
Views:	11 
Size:	13.4 KB 
ID:	1560

காஞ்சி காமாட்சியை வணங்குபவர்களுக்கு கிரகதோஷம் அணுகாது என்கிறார் மூகர் என்னும் புலவர். அவர் எழுதிய "மூக பஞ்சசதி' என்னும் 500 ஸ்லோகம் கொண்ட ஸ்தோத்திர நூல் இதைத் தெரிவிக்கிறது. இதிலுள்ள ஸ்லோகம் 59ஐப் படித்தால் இது புரியும்.

ததாநோ பாஸ்வத்தாம் அம்ருதநிலயோ லோஹிதவபு:
விநம்ராணாம் ஸெளம்யோ குருரபி கவித்வம் ச கலயந்!
கதௌ மந்தோ கங்காதர-மஹிஷி காமாக்ஷி பஜதாம்
தம: கேதுர்-மாத:ஸ்தவ சரணபத்மோ வியதே!!


சூரியன் முதல் கேது வரையான ஒன்பது கிரகங்களின் சமஸ்கிருதப் பெயர் இந்த ஸ்லோகத்தில் உள்ளது. அம்பாளின் திருவடியை இந்த கிரகங்களெல்லாம் பற்றிக் கொண்டிருக்கின்றன அல்லது பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஏனெனில், அந்த திருவடியில் இருந்து அமிர்தமே கொட்டுகிறது. அவளது பாத தரிசனம் அவ்வளவு விசேஷமானது. அப்போது, இந்த கிரகத்தால் எனக்கு இவ்வளவு பிரச்னை என முறையிட்டோமானால், அவளது கடைக்கண் பார்வை அந்த கிரகத்தின் மீது திரும்பும். அப்போது அந்த கிரகம் கைகட்டி வாய் பொத்தி அம்பாளின் உத்தரவைக் கேட்கும். கிரக தோஷம் என்பது கடுகளவும் இராது. அமிர்தம் குடித்தோருக்கு பிறப்பு இறப்பு இல்லை.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஆம்...நமக்கு இப்பிறப்பில் கிரக தோஷமில்லாத இன்ப வாழ்வும், இனி பிறப்பில்லை என்ற பேரானந்த வாழ்வும் கிடைக்கும்.

http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=6657