21 விதை தூவுங்கள்! டிரான்ஸ்பர் வாங்குங்க!


Click image for larger version. 

Name:	Sooriyan.jpg 
Views:	10 
Size:	14.6 KB 
ID:	1561


விருப்பமான இடத்திற்கு டிரான்ஸ்பர் பெற விரும்புவோர் ஒரு வழிபாட்டை தொடர்ந்து செய்யலாம். அதிகாலையில் சூரியன் உதயமாவதற்கு முன் எழுந்து நீராடி தூய உடை உடுத்துங்கள். உதயமாகும்போது, கிழக்கு நோக்கி சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.

அப்போது காய்ந்த மிளகாயின் 21 விதைகளை சூரியனுக்கு பக்தியுடன் சமர்ப்பியுங்கள். மூன்று நாட்கள் தொடர்ந்து இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும். அப்போது, சூரியனுக்குரிய 12 மந்திரங்களை ஜபிக்க வேண்டும்.

""ஓம் ஆதித்யாய நமஹ
ஓம் திவாகராய நமஹ
ஓம் பாஸ்கராய நமஹ
ஓம் ப்ரபாகராய நமஹ
ஓம் சஹஸுத்ர்ஷனவே நமஹ
ஓம் த்ரிலோசனாய நமஹ
ஓம் ஹரிதாஸவயே நமஹ
ஓம் விபாவஷே நமஹ
ஓம் தினக்ருதே நமஹ
ஓம் த்வாதசேத் மகயே நமஹ
ஓம் த்ரையி மூர்த்தயே நமஹ
ஓம் சூர்யாய நமஹ'' என்று சொல்லி வணங்குங்கள்.

சூரியன் அருளால் விரைவில் விரும்பிய இடத்திற்கு டிரான்ஸ்பர் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மனிதனை அதிகாரப் பதவியில் அமர்த்தும் கிரகம் சூரியன். எனவே, வேலை சார்ந்த சிரமங்களைச் சந்திப்போர் எல்லாருமே இந்த வழிபாட்டைச் செய்யலாம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
Source:http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=6658