Announcement

Collapse
No announcement yet.

ஹரா பரா உப்புமா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஹரா பரா உப்புமா

    காலை வேளையில் உப்புமா செய்வது மிகவும் எளிமையாக இருக்கும். அதிலும் வித்தியாசமான முறையில், மதிய வேளையில் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு உப்புமாவை முயற்சித்தால், இன்னும் நன்றாக இருக்கும் அல்லவா! ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, காலை வேளையில் செய்வதற்கு ஏற்றவாறு ஒரு சூப்பரான உப்புமா ரெசிபியை கொடுத்துள்ளது. அந்த உப்புமாவின் பெயர் ஹரா பரா உப்புமா. இந்த உப்புமா ஆரோக்கியமானது. ஏனெனில் இதில் பல்வேறு காய்கறிகள் சேர்த்து செய்கிறோம். சரி, இப்போது அந்த ஹரா பரா உப்புமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

    தேவையான பொருட்கள்: ரவை - 1 கப் பச்சை பட்டாணி - 1/2 கப் வெங்காயம் - 1 (நறுக்கியது)

    குடைமிளகாய் - 1 (நறுக்கியது) கேரட் - 1 (பொடியாக நறுக்கியது) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் தண்ணீர் - 1/2 கப் சட்னிக்கு... கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது) புதினா - 1/4 கப் (நறுக்கியது) பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது) சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு - 4 பற்கள் சர்க்கரை - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1/2 கப்

    சட்னிக்கு... கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது) புதினா - 1/4 கப் (நறுக்கியது) பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது) சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு - 4 பற்கள் சர்க்கரை - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1/2 கப்



    செய்முறை: முதலில் மிக்ஸியில் சட்னிக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயம் போட்டு 3-4 நிமிடம் பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்து பச்சை பட்டாணி, கேரட் மற்றும் குடைமிளகாய் சேர்த்து, 3-4 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து நன்கு கிளறி, உப்பு சேர்த்து தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் அதில் ரவை மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டி சேராதவாறு கிளறி, 2-3 நிமிடம் வேக வைத்து, தண்ணீர் ஓரளவு வற்றியதும் இறக்கினால், சூப்பரான ஹரா பரா உப்புமா ரெடி!!!

    Source: boldsky.



    Recipes in Tamil


Working...
X