5. திருவரங்கத்து மாலை - 21/114 :அரங்கன் உந்திக் கமலம் விரிந்தால் அண்டம் விரியும் !

பந்திக் கமலத் தடம் சூழ் அரங்கர் படைப்பு , அழிப்பு
சிந்தித்திடுவ்தும் இல்லை கண்டீர் ; அத் திசைமுகனோடு
உந்திக் கமலம் விரிந்தால் , விரியும் ; யுகக்கடையில்
முந்திக் குவியில் , உடனே குவியும் இம் மூதண்டமே

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபதவுரை :

பந்திக் கமலத் தடம் சூழ் வரிசையாகத் தாமரை மலர்ந்த தடாகம் சூழ்ந்த
அரங்கர் திரு அரங்க நாதர்
படைப்பு , அழிப்பு படைப்பு , அழிப்புகளைப பற்றி
சிந்தித்திடுவ்தும் இல்லை கண்டீர் நெஞ்சினால் நினைப்பதே இல்லை
அத் திசைமுகனோடு உந்திக் கமலம் பிரமனோடுஅரங்கனின் நாபித்தாமரை
விரிந்தால் , விரியும் மலர்ந்தால் , அண்டங்கள் தோன்றும் ;
யுகக்கடையில் கற்பாந்த காலத்தில்
முந்திக் குவியில் முன்னே பிரமனுடன் உந்தித் தாமரை மூடினால்
இம் மூதண்டமே உடனே குவியும் இந்த அண்டங்கள் உடனே ஒடுங்கிவிடும்


V.Sridhar