5. திருவரங்கத்து மாலை - 22/114 :காரணர் பூமியில் கிடந்தார் , இடந்தார் , கடந்தார் !

அடந்தை நடந்தை வனம் சூழ் அரங்கத்து , அரவணை மேல்
கிடந்தனர் ; துங்கக் கிரி மிசை நின்றனர் ; கேடில் ஒன்றாய்
இடந்தனர் ; மீள விழுங்கினர் ; கான்றன ; ஈரடியால்
கடந்தனர் ; கை வழி மண் ஆனது இந்த மண் காரணர்க்கே

பதவுரை :

அடந்தை நடந்தை வனம் சூழ் அடந்தை , நடந்தை எனும் சோலைகள் சூழ்ந்த
அரங்கத்து திரு அரங்கத்தில்
அரவணை மேல் கிடந்தனர் ஆதிசேஷனாகிய படுக்கையில் பள்ளி கொண்டார் ;
துங்கக் கிரி மிசை நின்றனர் உயர்ந்த திரு வேங்கட மலையில் நின்று அருளினார் ;
கேடில் ஒன்றாய் ஒப்பற்ற வராஹ அவதாரம் ஆகி
இடந்தனர் கொம்பினால் குத்தி எடுத்தார் ;
மீள விழுங்கினர் பின்பு கற்பாந்த காலத்தில் விழுங்கி அருளினார் ;
கான்றன கற்பத் தொடக்கத்தில் மீண்டும் உமிழ்ந்து அருளினார் ;
ஈரடியால் கடந்தனர் ராம அவதாரத்தில் இரண்டு திருவடிகளால் நடந்தார் ;
காரணர்க்கே எல்லாவற்றிற்கும் காரணம் ஆன எம்பெருமானுக்கு
இந்த மண் இந்த பூமி
கை வழி மண் ஆனது குயவன் கையில் வழிக்கும் மண் போல உரிமையாக உள்ளது

V.SridharDear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends