தெய்வம் எப்போதும் அருளைப் பொழிந்து கொண்டிருக்கிறது. அதைப் பெறும் விதத்தில் உங்கள் மனதைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள்.
* பூச்சியால், நோய்நொடியால் மனிதனுக்கு இறப்பு நேர்வதில்லை. மனதில் எழும் கவலையும், பயமும் அவனுக்கு அழிவை உண்டாக்குகின்றன.
* விதியின் முடிவு எப்படி இருந்தாலும், உண்மையான தெய்வபக்தியால் அதை வெல்ல முடியும். இந்த உலகின் தலைவரான கடவுளை பக்தியால் வசப்படுத்த முடியும்.
* தர்மத்தாலும், கருணையாலும் பெறப்படும் வெற்றி என்றென்றும் நிலைத்து நிற்கும்.
* தெய்வபக்தி ஒருவரிடம் உண்மையாக இருந்தால், உதவி செய்யும் குணம் இருக்கும். உதவும் மனப்பான்மை இல்லாத இடத்தில், பக்தி வெறும் வேஷமாகவே இருக்கும்.
- பாரதியார்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends