சில மாத இடைவெளிக்குப் பிறகு சென்னையில் மீண்டும் மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது. திங்கள்கிழமை முதல் தினமும் 2 மணி நேரம் மின் வெட்டு அமலில் இருக்கும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை தவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக கடும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. சில இடங்களில் 8 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில், சென்னையிலும் வரும் திங்கள்கிழமை முதல் 2 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. விவரங்கள் பின்வருமாறு

காலை 8 முதல் 10 மணி வரை:
புரசைவாக்கம், தேனாம் பேட்டை, தி.நகர், எம்.ஆர்.சி. நகர், ஆயிரம் விளக்கு, மயிலாப்பூர், பூக்கடை, பிராட்வே, மூலக்கடை, கொளத்தூர், செம்பியம்,மணலி, வியாசர்பாடி, கிண்டி தொழிற்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், தாம்பரம் கடப்பேரி, மெப்ஸ், கொட்டிவாக்கம், போரூர், சோழிங்கநல்லூர், தரமணி, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., சூளைமேடு, கொரட்டூர், பாடி, கோயம்பேடு மார்க்கெட், சின்மயா நகர், புழல், ரெட்ஹில்ஸ், அலமாதி.


காலை 10 முதல் பகல் 12 மணி

திருவல்லிக்கேணி, சைதாப் பேட்டை, சிஐடி நகர், புளியந்தோப்பு, ராயப்பேட்டை, ஆயிரம்விளக்கு ஒரு பகுதி, வடபெரும்பாக்கம், மணலி, நாப்பாளையம், பழைய வண்ணாரப்பேட்டை, பெரியார் நகர், திருவொற்றியூர், கோட்டூர்புரம், மாடம்பாக்கம், குரோம்பேட்டை, பம்மல், பல்லாவரம், ஐயப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், அகரம் பெரும்பாக்கம், திருமுடிவாக்கம், வேளச்சேரி, கோவிலம்பாக்கம், கீழ்கட்டளை, நன்மங்கலம், கீழ்ப்பாக்கம், மதுரவாயல், வானகரம், முகப்பேர் (கிழக்கு), பட்டாபிராம், திருநின்றவூர், திருவேற்காடு


பகல் 12 முதல் பிற்பகல் 2 மணி:

அடையார், சேப்பாக்கம், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, உயர் நீதிமன்றம், என்.எஸ்.சி. போஸ் சாலை, ஏழு கிணறு, மண்ணடி, ஸ்பென்சர், வள்ளுவர் கோட்டம், மகாலிங்கபுரம், நுங்கம்பாக்கம், மேற்கு மாம்பலம், அசோக் நகர், கே.கே.நகர், வில்லிவாக்கம் சிட்கோ, ஆர்.கே.நகர், தண்டையார் பேட்டை, கோவூர், குன்றத்தூர், மாங்காடு, கெருகம்பாக்கம், பூந்தமல்லி, குமணன்சாவடி, கரையான்சாவடி, பூந்தமல்லி டவுன், ராஜ்பவன், செயின்ட் தாமஸ் மவுன்ட், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், துரைப்பாக்கம், டைடல் பார்க், ஆவடி, திருமுல்லைவாயல், சேத்துப்பட்டு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, பட்டரவாக்கம், அண்ணா நகர் அவென்யூக்கள், அம்பத்தூர் தொழிற்பேட்டை. திருமுல்லைவாயல்.


பிற்பகல் 2 முதல் 4 மணி வரை:

சிந்தாதாரிப்பேட்டை, புதுப் பேட்டை, எழும்பூர், செக்ரடேரியட் காலனி, டவுட்டன், நந்தனம், பெரியமேடு, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, வடக்கு உஸ்மான் சாலை, கிழக்கு ஜார்ஜ் டவுன், வள்ளலார் நகர், கொண்டித் தோப்பு, பெரம்பூர் , கொளத்தூர், அயனாவரம், ஐ.சி.எப்,ஆலந்தூர், கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர், மேற்கு மாம்பலம், பெருங்குடி, பெசன்ட் நகர், தாம்பரம், செம்பரம்பாக்கம், நசரத்பேட்டை, நங்கநல்லூர், விருகம்பாக்கம், வடபழனி, ஷெனாய் நகர், அயப்பாக்கம், திருமங்கலம், அண்ணாநகர் (மேற்கு)


மாலை 4 முதல் 6 மணி வரை:
கல்லூரி சாலை, கிரீம்ஸ் ரோடு, சைதாப்பேட்டை (மேற்கு),கொடுங்கையூர், ராயபுரம், மாதவரம், திரு.வி.க.நகர், வளசரவாக்கம், ஈஞ்சம்பாக்கம், சேலையூர், சூளைமேடு, மடிப்பாக்கம், பெருங்களத்தூர், சிறுசேரி.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsதி இந்து