Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 35/114 : ஸ்ரீ வாமன் அவதார வை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 35/114 : ஸ்ரீ வாமன் அவதார வை

    5. திருவரங்கத்து மாலை - 35/114 : ஸ்ரீ வாமன் அவதார வைபவம் 1/4

    தார் ஏற்ற மாவலி நீரையும், சீர் ஏற்ற நான்முகன் நீரையும் கார் ஏற்ற மேனி ஒக்க ஏற்றன !

    தார் ஏற்ற வெண் குடை மாவலி வார்க்கவும் , தாமரை மேல்
    சீர் ஏற்ற தொல் நான்முகத்தான் விளக்கவும் , செம்பொன் முடிக்-
    கார் ஏற்ற மேனி அரங்கேசர் கையும் கழலும் ஒக்க
    நீர் ஏற்றன வண் திருக் குறள் ஆகி நிமிர்ந்த அன்றே

    பதவுரை :

    வண் திருக் குறள் ஆகி வளமான ஸ்ரீ வாமன மூர்த்தி ஆகி ,
    நிமிர்ந்த அன்றே உடனே திரிவிக்ரமனாய் நிமிர்ந்து உயர்ந்த அந்நாளில் ,
    தார் ஏற்ற வெற்றி மாலை சூடியவனும் ,
    வெண் குடை ஒற்றை வெண் கொற்றக் குடையை உடையவனும் ஆன
    மாவலி வார்க்கவும் மகா பலி நீர் வார்த்து கையில் தானம் செய்யவும் ,
    தாமரை மேல் நாபித் தாமரையில் தோன்றியவனும்
    சீர் ஏற்ற சிறப்புகள் உடையவனுமான
    தொல் நான்முகத்தான் விளக்கவும் பழமையான பிரமன் நீரால் காலைக் கழுவி விளக்கவும் ,
    செம்பொன் முடி சிவந்த பொன் மயமான திருமுடியும்
    கார் ஏற்ற மேனி கரு மேகத்தை ஒத்த திருமேனி உடையவனுமான
    அரங்கேசர் கையும் கழலும் அரங்கனின் திருக்கைகளும் , திருவடிகளும்
    ஒக்க நீர் ஏற்றன ஒரே சமயத்தில்இரண்டு நீரையும் ஏற்றன



    அடுத்து வருவது : ஸ்ரீ வாமன் அவதார வைபவம் 2/4



    V.Sridhar

    Last edited by sridharv1946; 02-12-13, 20:15.
Working...
X