Announcement

Collapse
No announcement yet.

வண்டலூரில் அமைந்துள்ள லட்சுமி குபேரன் க&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வண்டலூரில் அமைந்துள்ள லட்சுமி குபேரன் க&

    வண்டலூரில் அமைந்துள்ள லட்சுமி குபேரன் கோயில்

    சென்னையை அடுத்த வண்டலூர் அருகே ரத்தினமங்கலம் என்ற ஊரில் அமைந்திருப்பது லட்சுமி குபேரன் கோயில். இது 500 ஆண்டுகள் பழமையான கோயிலாகும்.

    Click image for larger version

Name:	kuberan.jpg
Views:	1
Size:	34.9 KB
ID:	35475



    இந்தியாவிலேயே லட்சுமி குபேரனுக்கு என்று தனிக் கோயில் இருப்பது இந்த ஓர் இடத்தில் மட்டுமே என்பது இந்த கோயிலின் சிறப்பாக உள்ளது.
    தினமும் கோயில் நடை காலை 5.30 மணிக்கே திறக்கப்படுகிறது. மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் இறைவனை தரிசிக்கும் வகையில் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    லட்சுமி குபேரன் கோயிலில், சிரித்த முகத்துடன், அன்னை லட்சுமி, துணைவியார் சித்தரிணியுடன் காட்சி அளிக்கிறார் குபேரன். இந்த காட்சியைப் பார்ப்பதே பரவசத்தை ஏற்படுத்தும். அந்த சன்னதியை அடுத்து லட்சுமி கணபதி, குபேர லிங்கம், செல்வ முத்துக்குமரன், யோக ஆஞ்சநேயர், நவ கிரகங்களுக்கு என தனித்தனி பிரகாரங்களும் உள்ளன. இங்கு மிக அழகாக ஒரு கோசாலையும் பராமரிக்கப்பட்டு வருகிறது. பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான் என்பது நம்பிக்கை.


    அதேப்போல கோமாதா பூஜையை குபேர பூஜையாகக் கருத வேண்டும் என்கிறது சாஸ்திரம். எனவே, இந்த கோயிலில் இருக்கும் கோசாலையில் உள்ள பசுக்களுக்கு பழங்கள் அளிப்பது குபேரனுக்கு செய்யும் பூஜையாகவே கருதப்படுகிறது.

    செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியையும், அதனை காக்கும் குபேரனையும் தீபாவளி திருநாளில் ஒரு சேர தரிசித்து வந்தால், அவர்கள் வாழ்வில் செல்வம் செழிக்கும். அதேப்போல திருப்பதிக்கு செல்லும் முன் ரத்னமங்கலம் குபேரன் கோயிலுக்குச் சென்று லட்சுமி குபேரனை வழிபட்டுச் செல்வதும் மிகுந்த விசேஷமாகும்.

    dinamani.com

  • #2
    Re: வண்டலூரில் அமைந்துள்ள லட்சுமி குபேரன் &#29

    மனதிற்கு மகிழ்வு தரும் அருமையான பதிவு

    Comment


    • #3
      Re: வண்டலூரில் அமைந்துள்ள லட்சுமி குபேரன் &amp

      Great information. Should be happy to have the route map as well. Thanks a lot.

      - - - Updated - - -

      Great information. Should be happy to have the route map as well. Thanks a lot.

      Comment


      • #4
        Re: வண்டலூரில் அமைந்துள்ள லட்சுமி குபேரன் &amp

        இருப்பிடம் :
        குபேரக் கோயிலுக்கு செல்ல விரும்பும் பக்தர்களுக்கு தாம்பரத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள ரத்னமங்கலத்தில் இறங்கி சிறிது தூரம் நடந்தால் கோயில் வருகிறது. விசேஷ தினங்களில் கோயில் வரை சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது.


        Hope this helps.

        Source:http://temple.dinamalar.com/New.php?id=709

        - - - Updated - - -

        Comment

        Working...
        X