Announcement

Collapse
No announcement yet.

ரத்த விருத்தி தரும் வாழைக்காய்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ரத்த விருத்தி தரும் வாழைக்காய்

    ரத்த விருத்தி தரும் வாழைக்காய்:-


    வாழைக்காயில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தை தான் சமைப்பது வழக்கம்.

    அதற்காக மற்ற வகை வாழைக்காய்களை சாப்பிடக் கூடாது என்பது கிடையாது. அவைகள் பரவலாக கிடைப்பதில்லை.

    மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து இருக்கிறது.

    இதனால் உடல் பருக்கும். உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும்.

    பசியை அடக்கும். இதனுடன் மிளகு சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது.

    வாயால் ரத்தம் கக்குபவர்களுக்கும், கிராணி, நீரழிவு உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக் கச்சல் பயன்படும்.

    வாழைக்காயைச் சமைக்கும்போது மேல் தோலை மெல்லியதாகச் சீவியெடுத்தால் போதும்.

    உள்தோலுடன் சமைப்பதே சிறந்தது. சிலர் இதுபோன்று சீவியெடுத்த தோலை நறுக்கி வதக்கி, புளி, மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள்.

    பொதுவாக கேரளத்தில் இந்தப் பழக்கம் அதிகம் இருக்கிறது.

    இப்படி துவையலாக செய்து சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், பலமும் உண்டாகும்.

    வாழைக்காய் சாப்பிடு வதால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் ஆகியவையும் நீங்கும்.

    ஆனால் வாய்வு மிகும்.

    அதுபோல வாழைப்பிஞ்சு சாப்பிடுவது பத்தியத்திற்கு ஏற்றதுதான் என்றாலும் மலத்தை இறுக்கி விடும்.

    பச்சை வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில்; உலர்த்தி மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்..

    Source: Ananthanarayanan Ramaswamy

  • #2
    Re: ரத்த விருத்தி தரும் வாழைக்காய்

    பேரன்புமிகு ஸ்ரீ பத்மநாபன் அவர்களுக்கு, நமஸ்காரம்,
    வாழைக்காய் எனக்கு ரொம்பவும் பிடித்த காய்களில் முதன்மையானது . அனால் அதில் இவ்வளவு சத்துக்கள் உள்ளன என்று தங்கள் இடுகையை படித்தபின் தான் அறிந்தேன். வாழைக்காய் சாப்பிடுவதால் வாயுத்தொல்லை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது , ஆக அதை குறைக்க தயிர் சேர்த்துக்கொண்டால் நல்லது. அல்லது மோர் குழம்பு சேர்த்துக்கொள்ளலாம்.

    தங்கள் நலங்கொரும் ,
    ப்ரஹ் மண்யன்
    பெங்களூரு

    Comment


    • #3
      Re: ரத்த விருத்தி தரும் வாழைக்காய்

      Dear Brahmanyan Sir,

      Namaskarams. Thanks for the information that taking Curd or Morkuzhambu along with Plantain is a remedy for gas trouble. I also like Vazhakkai very much and I don't mind taking it daily also. But I was always afraid of this gas problem. Now that I know the remedy, I can take very frequently.

      With Namaskarams

      S. Sankara Narayanan
      RADHE KRISHNA

      Comment

      Working...
      X