Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 39/114 : ஸ்ரீ பரசு ராம அவதார

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 39/114 : ஸ்ரீ பரசு ராம அவதார

    5. திருவரங்கத்து மாலை - 40/114 :ஸ்ரீ பரசு ராம அவதார வைபவம் 1/1

    இருபதை வென்ற ஆயிரம் துணித்த ஒரு கோடரி !

    மறிக்கும் கயற்கண்ணி பங்காளன் வாழ் வெள்ளி மால் வரையைப்-
    பறிக்கும் கபடன் பணைப்புயமோ - அவன் பைங்கடகம்
    செறிக்கும் புயம் செற்ற ஆயிரம் திண்புயமோ - அவற்றைத்-
    தறிக்கும் திறல் மழுவோ - அரங்கா ! சயத் தார் உடைத்தே ?

    பதவுரை :

    அரங்கா திரு அரங்கநாதனே !
    மறிக்கும் கயற்கண்ணி அசையும் மீன் போன்ற கண் உடையவளான மீனாக்ஷியை
    பங்காளன் வாழ்தனது இடப் பக்கத்தில் உடைய சிவன் வசிக்கின்ற
    வெள்ளி மால் வரையை வெள்ளி மலையான கைலாய மலையை
    பறிக்கும் கபடன் பெயர்த்து எடுத்த வஞ்சகன் ராவணனுடைய
    பணைப்புயமோ பருத்த இருபது கைகளோ ,
    அவன் பைங்கடகம் பொன் வளைகள் அணிந்த ராவணனது
    செறிக்கும் புயம் செற்ற இருபது கைகளை நெருக்கிக் கட்டிய
    ஆயிரம் திண்புயமோ கார்த்த்வீர்யார்ச்சுனனின் ஆயிரம் வலிய கரங்களோ ,
    அவற்றைத் தறிக்கும் அவனது ஆயிரம் கரங்களையும் வெட்டித் தள்ளிய
    திறல் மழுவோ பரசு ராமனின் வலிமை உடைய கோடாலியோ
    சயத் தார் உடைத்தே ? வெற்றி மாலையை உடையது எது ?

    அடுத்து வருவது : ஸ்ரீ
    தசரத ராம அவதாரம் 1/8


    V.Sridhar

    Last edited by sridharv1946; 03-12-13, 21:20.
Working...
X