யஜுர் வேத ஆபஸ்தம்ப ப்ரம்ஹயக்ஞம்
(நெற்றிக்கு இட்டுக் கொண்டு செய்யவும்.).

ஆசமனம். அச்யுதாய நமஹ; அனந்தாய நமஹ; கோவிந்தாய நமஹ. கேசவா, நாராயண; மாதவா; கோவிந்தா விஷ்ணு; மது ஸுதன. ;.த்ரிவிக்ரம. வாமனா ஶ்ரீதரா; ஹ்ரீஷீகேசா பத்மநாபா; தாமோதரா..

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே..

ஓம் பூ; ஓம் புவஹ; ஓகும் ஸுவஹ; ஓம் மஹஹ ;ஓம் ஜனஹ ஓம் தபஹ; ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்* ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்ஞம் கரிஷ்யே .ப்ரம்ஹ யக்ஞேன யக்*ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமீ.

தீர்தத்தினால் கைகளை ஸுத்தம் செய்து கொள்ளவும்.. பிறகு வலது துடையில் வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் கைகளை வைத்து கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.

மந்த்ரம்.
ஓம் பூ: தத்ஸ விதுர்வரேண்யம்
ஓம்புவ: பர்கோ தேவஸ்ய தீ மஹீ,
ஓகும் ஸுவ: தியோயோந: ப்ர்சோதயாத்.

ஓம்பூ: தத்ஸவிதுர் வரேண்யம் ,பர்கோ தேவஸ்ய தீமஹி
ஓம்புவ: தியோயோனந: ப்ரசோதயாத்.,
ஓகும் ஸுவ: தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோயோனஹ ப்ரசோதயாத்.

ஹரி:ஓம் அக்னிமீளே புரோஹிதம் ,யக்ஞஸ்ய

தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.

ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்பயது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.

ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.

ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.

ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு . கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி.

இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.

ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை
நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.

கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்.து கொள்ளவும்.
வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மான ம்ருதாத் ஸத்ய முபாகாம்.

தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.
உப வீதி--------பூணல் வலம். நுனி விரல் வழியாக தீர்த்தம் விடவும்.

ப்ரும்மா தயோ யே தேவா: தான் தேவான் தர்பயாமி.
ஸர்வான் தேவான் தர்பயாமி.

ஸர்வ தேவ கணான் தர்பயாமி.
ஸர்வ தேவ பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ தேவ கண பத்னீஸ் தர்பயாமி.

நிவீதி..பூணல் மாலையாக போட்டுக் கொள்ளவும்.
சுண்டி விரல் பக்கமாக உள்ளங்கையை சாய்த்து தண்ணீர் விடவும்.

க்ருஷ்ண த்வை பாய நாதாய: யே ரிஷய: தான் ரிஷீம்ஸ் தர்பயாமி ஸர்வான் ரிஷீம்ஸ் தர்பயாமி.
ஸர்வ ரிஷி கணாம்ஸ் தர்பயாமி
ஸர்வ ரிஷி பத்னீஸ் தர்பயாமி.

ஸர்வ ரிஷி கண பத்னீஸ் தர்பயாமி.
ப்ரஜாபதிம் காண்ட ரிஷிம் தர்பயாமி.
ஸோமம் காண்ட ரிஷிம் தர்பயாமி

அக்னீம் காண்ட ரிஷிம் தர்பயாமி.
விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி.

உப வீதி-----பூணல் வலம். நுனி விரல்களால் தீர்த்தம் விடவும்.

ஸாகும் ஹிதீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி.
யாக்ஞிகீ: தேவதா: உபநிஷத; தர்பயாமி.
வாருணீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி.
ஹவ்ய வாஹம் தர்பயாமி.

நிவீதி-----பூணல் மாலை. சுண்டி விரல் பக்கமாக கையை சாய்த்து தீர்த்தம் விடவும்.

விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி.
மணிக்கட்டு வழியாக தர்ப்பணம். ப்ரும்மாணம் ஸ்வயம்புவம் தர்பயாமி.
உபவீதி பூணல் வலம். நுனி விரலால் தீர்த்தம் விடவும்.

விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி
அருணான் காண்ட ரிஷீன் தர்பயாமி
ஸதஸஸ்பதீம் தர்பயாமி.


ரிக் வேதம் தர்பயாமி
யஜுர் வேதம் தர்பயாமி
ஸாம வேதம் தர்பயாமி
அதர்வண வேதம் தர்பயாமி.
இதிஹாஸ புராணம் தர்பயாமி.
கல்பம் தர்பயாமி.

ப்ராசீணாவீதி---------பூணல் இடம். கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் மத்ய பாகத்தால் தீர்த்தம் விடவும்.

ஸோம: பித்ருமான் யம:அங்கிரஸ்வான் அக்னி:கவ்ய வாஹணாதய: யேபிதர:: தான் பித்ரூன் தர்பயாமி.
ஸர்வான் பித்ரூன் தர்பயாமி.

ஸர்வ பித்ரு கணான் தர்பயாமி.
ஸர்வ பித்ரூ பத்னீஸ் தர்பயாமி
ஸர்வ பித்ரூ கண பத்னீஸ் தர்பயாமி.

ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத,த்ருப்யத:

ஆ ப்ரும்ம ஸ்தம்ப பர்யந்தம் ஜகத் த்ருப்யது :என்று சொல்லி பூமியில் தீர்த்தம் விடவும். மணிக்கட்டு வழியாக..

உபவீதி ஆசமனம். காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதே ஸ்பாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மந் நாராயணாயேதி ஸமர்பயாமி..

ஓம் தத்ஸத்..

இது யஜுர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ர ப்ருஹ்ம யக்ஞம். யஜுர் வேத போதாயன ஸூத்ரம் , ருக் வேதம், சாம வேத ப்ருஹ்மயக்ஞம் பல மாறுதல்கள் உண்டு. .

தைத்ரீய ஆரண்யகம் இரண்டாம் ப்ரச்னத்தில் இதன் விவரம் உள்ளது.

கிழக்கு, வடக்கு, வட கிழக்கு இவைகளில் ஒரு திக்கை நோக்கி ச் செய்யலாம்.

ஹோமத்திற்கு பிறகு அல்லது மாத்யானிக ஜபத்திற்கு பிறகோ
தேவ தர்பணத்திற்கு பிறகு, வைஸ்வதேவத்திற்கு பிறகேனும் செய்யலாம்.
வேதம் ஒரு ப்ரஸ்னமோ , சில அனுவாகங்களோ முதல் நாள் விட்டதற்கு மேல் தொடங்கி ஜபிக்க வேண்டும்.

இதற்கு அநத்யயன தினம் பார்க்க வேண்டாம் .தர்ப்பாசனம் அல்லது தடுக்கு கீழே போட்டுக்கொண்டு அதன் மேல் உட்கார்ந்து ஜபிக்கவும். கம்பளத்தில் உட்கார்ந்து சொல்லக்கூடாது.

காலை தவறிப்போய் விட்டால் மாத்யாநிகம், வைஸ்வதேவத்திற்க்கு பின்னும் தான் காலமாகும்.அத்யயனமே தபஸ். தபஸே அத்யயனம். . அத்யயனம் பண்ணாதவன் புருஷ ஸூக்தத்தையாவது பகவத் த்யானத்துடன் சொல்ல வேன்டும். அல்லது காயத்திரியையாவது பத்து தடவை ஜபிக்க வேண்டும்.

வேத பாராயணம் ஆனதும் இதிகாஸ புராணம் படிக்க வேன்டியது. இந்த யக்ஞத்தில் ப்ருஹ்மம் என்ற வேதமே ஆஹூதி த்ரவ்யமாக ஹோமம் பண்ணபடுகிறது. . அத்யயனமே வஷட் காரமாகும். அதனால் தான் இதற்கு அநத்யயன தோஷமே கிடையாது.

ச்ருதியும் இந்த யக்ஞத்திற்கு மேகமே ஹவிஸ் வைக்கும் பாத்ரம், மின்னலே அக்னி; மழை ஹவிஸ்; இடியே வஷட் காரம்; மேக கர்ஜனை அனுவஷட் காரம்;

வாயுவே சரீரம். அமாவாஸ்யையே ஸ்வஷ்டாகாரம்;

இவைகளை இப்படி அறிந்து மழை பெய்யும் போதும்; இடி இடிக்கும் போதும்;. மேகம் கர்ஜிக்கும் போதும் காற்று வீசும் போதும், அமாவாசையின் போதும் ஒரு ரிக்கையேனும் ஜபித்தாலும், அல்லது ஸத்யம் தப: என்ற மந்த்ரதையேனும் ஜபித்தாலும் ப்ருஹ்ம யக்ஞ அத்யயன பலனை பெறுகிறான் என்கிறது வாஜஸநேயி ப்ராஹ்மணம்.

தேவதார்ச்சனம், பாராயணம், காம்ய ஜபம், யாகத்திற்கு, வேதாங்கங்களை அப்யசிப்பதற்கு , ப்ருஹ்ம யக்ஞத்திற்கும் அனத்தியயன தோஷமில்லை.

ப்ரதி தினம் ஒரு ப்ரச்னம் சொல்லுபவன் அனத்தியயன தினத்திலும் சொல்லலாம்.. பிறப்பு இறப்பு தீட்டு உள்ள போது மட்டும் சொல்ல வேண்டாம்.

ப்ருஹ்ம யக்ஞத்திர்கு பிறகு ராமாயனம், பாகவதம், பகவத் கீதை தினம் ஒரு அத்யாயமாவது படிக்க வேண்டும்.. இரவிற்குள் செளகரியபட்ட போதாவது படிக்கவும்.

அந்தணர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் தான் கற்றுக்கொண்ட வேதத்தை தினசரி சிறிதளவாவது சொல்வதற்குத்தான் ப்ருஹ்ம யக்ஞம் என்று பெயர்.

தினசரி காலையில் ஸந்தியாவந்தனம்,ஓளபாசனம் பூஜை முதலிவற்றை முடித்துவிட்டு குரு முகமாக கற்றுக்கொண்ட ஶ்ரீ ருத்ரம், சமகம், புருஷ சூக்தம், ஶ்ரீ ஸூக்தம், துர்கா ஸுக்தம், பாக்கிய ஸூக்தம் போன்ற வேத பாகங்களை சிறிதாவது சொல்ல வேண்டும்., அல்லது காயத்ரியாவது சொல்லலாம்

ஆசனத்தின் மீது அமர்ந்து கொன்டு கிழக்கு முகமாக வலது காலை இடது துடை மேல் போட்டுக்கொன்டு .வேதம் சொல்ல வேண்டும்.

வேதம் கற்றவர்கள் முதல் நாள் முடிவடைந்த பகுதியில் தொடங்கி , தொடர்ந்து அடுத்த நாள் சொல்ல வேண்டும்.. இதற்கு பிறகு தேவர்கள், ரிஷிகள், பித்ருக்களுக்கு ஜலத்தால் தர்பணம் செய்ய வேண்டும்.

இதுவே ப்ருஹ்மயக்ஞம் எனப்படும். தேவ, ரிஷி பித்ரு அருளை மிக சுலபமாக பெற்று தரும் இந்த ப்ருஹ்ம யக்ஞ தர்பணம் தினமும் செய்ய வேண்டும்.

க்ருஷ்ண யஜுர் வேதம் தைத்திரீய ஆரண்யகம் சொல்கிறது: உத்தமம் நாககும் ரோஹதி; உத்தம: ஸமாநானாம் பவதி; யாவந்தகும் ஹவா: அக்ஷய்யஞ்சாபபுநர் ம்ருத்யுஞ் ஜயதி; ப்ருஹ்மண: ஸாயுஜ்யம் கச்சதி என்று.

தினமும் ப்ருஹ்மயக்ஞம் செய்பவர் இறந்த பின்னர் ஸ்வர்க்கம் செல்வர்;

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஇவ்வுல்கில் ஜீவித்திருக்கும் வறை தமக்கு சமமானவர்களுக்குள் சிறந்தவராக இருப்பர்;; செல்வம் நிறைந்த பூமி முழுவதும் தானம் செய்த பலனுக்கு அதிகமாகவே பலன் கிடைக்கும்.; துர் மரணம் வராது; ஸ்வர்க்கத்தை அடைவான்; ப்ருஹ்ம ஸாயுஜ்யம் என்னும் முக்தி அடைவான் என அர்த்தம்.

வேதம் சொல்வது, ப்ருஹ்ம யக்ஞத்தின் முதல் பகுதி... மாத்யானிகம் செய்த பிறகுத்தான் ப்ருஹ்ம யக்ஞ தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்ய வேண்டும். வேதம் சொல்வதை காலையிலும் செய்யலாம். மாத்யானிகம் செய்த பிறகு வேதம் சொல்லி விட்டு தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்யலாம்

.மாத்யானிகத்திற்கு முன்பு தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்யக்கூடாது. ப்ருஹ்மசாரி உள்பட அந்தணர் எல்லோரும் தினமும் ப்ருஹ்மயக்ஞம் செய்ய வேண்டும். இதனால் மறைந்த முன்னோர்களுக்கு தேவையான ஆஹாரம் கிடைக்கிறது. சந்தோஷ மடைகிறார்கள்.(.யஜுர் வேதம்).

முறையாக நான்கு வேதங்களின் ஆரம்பத்தையும் சொல்லிவிட்டு அதன் முடிவில் தேவ ரிஷி பித்ரு தர்பணம் கரிஷ்யே என்று சொல்லி தர்பணம் செய்கிறோம்.; இவ்விரண்டும் சேர்ந்ததே ப்ருஹ்ம யக்ஞம்.

பித்ருக்கள் என்பவர் பல வகை குழுவாக இருக்கிறார்கள். இவர்களில் நித்ய (திவ்ய) பித்ருக்கள் என்பவர் சிலர். தினசரி ஸ்நானம் செய்த பிறகு குடுமி முடியை முன் பக்கமாக விட்டூக்கொன்ட ஜலம் பூமியில் விழுவதை குடிக்கிறார்கள். வஸ்த்ரம் பிழியும் தண்ணீரையும் குடிக்கிறார்கள்.

ப்ருஹயக்ஞம் பித்ரு தர்பண நீரையும் இவர்கள் தான் சாப்பிடுகிறார்கள்.

அமாவாசை முதலிய நாட்களில் அதிவ்ய பித்ருக்களுக்கு தர்பணம்

செய்கிறோம். தந்தை உள்ள இல்லாத எல்லோரும் பூணல் இடம் போட்டுக்கொண்டு ப்ருஹ்மயக்ஞ தர்பணம் செய்யலாம்.. இதனால் தர்பணம் செய்பவருக்கும் அவரின் பெற்றோருக்கும் ஆயுள் அதிக மாகும்.

ப்ருஹ்மோபதேசம் (பூணல் கல்யானம்) முதல் கடைசி காலம் வரை தினமும் ப்ருஹ்மயக்ஞம் அந்தணர்கள் செய்ய வேண்டும்.

அமாவாசை தர்பணம் செய்த பிறகு ப்ருஹ்மயக்ஞம் செய்ய வேண்டும். ச்ராத்தம் முடிந்த பிறகு பின்ட பித்ரு தர்பணம் செய்த பிறகு பரேஹணி தர்பணம் செய்த பிறகு ப்ரஹ்மயக்ஞம் செய்ய வேண்டும்.