Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 55/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 55/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார

    5. திருவரங்கத்து மாலை - 55/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 5/25

    சிந்திக்காமல் , வந்திக்காமல் சிறு தாழி முத்தி பெற்றது என்னோ ?

    சிந்திக்க நெஞ்சு இல்லை ; நா இல்லை , நாமங்கள் செப்ப ; நின்னை
    வந்திக்க மெய் இல்லை , வந்து இரு போதும் ; மொய்ம் மாமலர் பூம்-
    பந்தித் தடம் புடை சூழ் அரங்கா ! ததி பாண்டன் உன்னைச்-
    சந்தித்த நாள் , முத்தி பெற்றது என்னோ , தயிர்த் தாழியுமே ?

    பதவுரை :

    மொய்ம் மாமலர்ப் நெருங்கிய பெரிய மலர்களை உடைய
    பூம்பந்தித் தடம் புடை சூழ் அழகிய வரிசையாகிய தடாகங்கள் பக்கங்களில் சூழ்ந்த
    அரங்கா திரு அரங்கத்து நாதனே !
    சிந்திக்க நெஞ்சு இல்லை உன்னை தியானிக்க மனம் இல்லை ;
    நாமங்கள் செப்ப நா இல்லை உனது பெயரைச் சொல்ல நா இல்லை ;
    இரு போதும் வந்து காலை , மாலை இரு பொழுதும் வந்து
    நின்னை வந்திக்க மெய் இல்லை உன்னை வணங்க உடம்பு இல்லை ;
    ததி பாண்டன் ஆனால் ததிபாண்டன் என்பவன்
    உன்னைச் சந்தித்த நாள் உன்னை அடைந்து முக்தி பெற்ற பொழுது
    தயிர்த் தாழியுமே அவனுடன் , அவனது தயிர்க் குடமும்
    முத்தி பெற்றது என்னோ முத்தி உலகம் அடைந்தது எவ்வாறோ ?


    அடுத்து வருவது : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 6/25

    V.Sridhar

    Last edited by sridharv1946; 07-12-13, 13:13.
Working...
X