Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 56/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 56/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார

    5. திருவரங்கத்து மாலை - 56/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 6/25

    குன்றா விளைவுடன் , வண்மை , பருவம் , குணங்கள் : இவை
    பொன்றாது இருந்த கண் மாயம் என்னோ - பொன்னி சூழ் அரங்கா !
    அன்று ஆயர் தம் குல மைந்தர்களாயும் அலகு இல் இளம்
    கன்றாயும் , நாள் தொறும் சென்று , வந்து ஆடிய காலத்திலே !

    பதவுரை :

    பொன்னி சூழ் அரங்கா காவிரி ஆறு சூழும் திரு அரங்கத்து நாதனே !
    அன்று கிருஷ்ணாவதாரத்தில்
    லகு இல் அளவு இல்லாமல்
    ஆயர் தம் குல மைந்தர்களாயும் இடையர் சாதிப் பிள்ளைகளாயும் ,
    இளம் கன்றாயும் பசுக்களின் சிறு கன்றுகளாகவும்
    நாள் தொறும் சென்று தினம் தோறும் சென்று
    வந்து ஆடிய காலத்திலே வந்து விளையாடிய பொழுது

    குன்றா விளைவுடன் அவர்களுக்கு குறையாத வளர்ச்சியும் ,
    வண்மை பருவம் குணங்கள் வளமும் , வயதும் , குணங்களும்
    இவை பொன்றாது இருந்த இவை குறையாமல் இருந்த
    கண் மாயம் என்னோ மாய வித்தை என்னவோ ?

    அடுத்து வருவது : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 7/25




    V.Sridhar

    Last edited by sridharv1946; 07-12-13, 13:42.
Working...
X