Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 57/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 57/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார

    5. திருவரங்கத்து மாலை - 57/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 7/25

    நெடும் கான் நிலத்து , கடும் கான நல் அனல் துற்ற மாயம் என்ன !

    நெடும் கான் நிலத்து , உடன் கோவலர் தாம் , மிக நின்று ' நெஞ்சம்
    நடுங்காது , இமைத்திடும் கண்கள் எல்லாம் ' என்று - நண்ணவர் மேல்
    விடும் கால நேமி அம் கை அரங்கா ! கண் விழிக்கு முன்னே
    கடும் கான நல் அனல் துற்ற அம் மாயம் என் சொல்லுகவே ?


    பதவுரை :

    நண்ணவர் மேல் விடும் பகைவர் மேல் பிரயோகிக்கின்ற
    கால நேமி யமனை ஒத்த சக்கரத்தை ஏந்திய
    அம் கை அரங்கா அழகிய கைகள் உடைய அரங்க நாதனே !
    நெடும் கான் நிலத்து பெரிய காட்டினில்
    உடன் கோவலர் தாம் மிக இடையர்கள் மிகத் திரண்டு இருக்க
    நின்று நீ அவர்கள் நடுவே நின்று
    நெஞ்சம் நடுங்காது "மனம் அஞ்சாமல்
    இமைத்திடும் கண்கள் எல்லாம் என்று கண்களை மூடிக் கொள்ளுங்கள் " என்று கூறி
    கண் விழிக்கு முன்னே அவர்கள் கண்ணைத் திறக்கு முன்னே
    கடும் கான நல் அனல் வெப்பம் பொருந்திய பெரும் காட்டுத் தீ முழுவதையும்
    துற்ற அம் மாயம் விழுங்கிய அந்த மாயத்தை
    என் சொல்லுகவே ? என்ன என்று சொல்வது


    அடுத்து வருவது : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 8/25


    V.Sridhar



    Last edited by sridharv1946; 07-12-13, 19:32.
Working...
X