5. திருவரங்கத்து மாலை - 58/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 8/25

ஆயர் எல்லாம் பரம பதத்தில் போய் எஞ்ஞன் மீண்டதுவே ?

வானாடரில் சிலர் சென்று கண்டார் இல்லை ; மற்று அதனில்
போனாரில் மீள வந்தார் இல்லை - பூவின் மங்கை
ஆனாத செல்வத் திரு அரங்கா ! - கொச்சை ஆயர் எல்லாம்
மேனாள் பரம பதத்தில் போய் எஞ்ஞன் மீண்டதுவே ?

பதவுரை :


பூவின் மங்கை தாமரை மலரில் தோன்றிய திருமகளது
ஆனாத செல்வத் திரு அரங்கா நீங்காத செல்வத்தை உடைய திரு அரங்கா !
வானாடரில் சிலர் தேவ லோகத்தில் உள்ளவர்களில் சிலர்
சென்று கண்டார் இல்லை பரம பதத்தைப் போய்ப் பார்த்தவர் இல்லை ;
மற்று அதனில் போனாரில் அங்கு சென்றவர்களில்
மீள வந்தார் இல்லை திரும்பவும் பூமிக்கு வந்தவர் யாரும் இல்லை ;
கொச்சை ஆயர் எல்லாம் கீழ்மையான இடையர்கள் எல்லோரும்
மேனாள் பரம பதத்தில் போய் முன்பு பரம பதம் சென்று
எஞ்ஞன் மீண்டதுவே மறுபடியும் மறுபடியும் திரும்பி வந்தது எவ்வாறு ?அடுத்து வருவது : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 9/25

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite FriendsV.Sridhar