Announcement

Collapse
No announcement yet.

59,60,70,80 கல்யாண தொடர்ச்சி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 59,60,70,80 கல்யாண தொடர்ச்சி

    ஹோம ஆஹூதி விளக்கங்கள்.

    ஆறு சாஸ்த்ரிகளை கொண்டு ஹோமம் செய்யும் போது ஒவ்வொரு திரவ்யமும் இரண்டு சாஸ்திரிகளால் ஆஹூதியாக அளிக்கப்படும்.ப்ரதி த்ரவ்யத்திற்கு ஸஹஸ்ர ( ஆயிரம்)) கணக்காக 1008 ஆஹுதிகள் அளிப்பதால் ஒவ்வொரு சாஸ்த்ரிகளும் 504 ஆஹூதிகள் அளிக்க வேண்டும்.

    இதற்கு நேர மதிகமாவதால் மூண்று திரவ்யத்திற்கும் சேர்த்து 1008 ஆஹுதிகள் என்ற திட்டம் ஏற்படுத்திக் கொள்ளலாம்.1008/3=336.

    336 என்ற எண்ணிக்கை லகு ஸஹஸ்ரம் ஆகிறது.. இதை 6 பேர் செய்யும் போது 336/6=56. ஒரு சாஸ்த்ரிகளுக்கு 56 ஆஹுதி என திட்டமிட்டு கொள்ளலா.ம்.

    108 எண்ணிக்கை ஆஹூதி அளிக்கும் போது ஒவ்வொரு த்ரவ்யத்திற்கும் 108 ஆஹூதி அளிக்கலாம். இரண்டு சாஸ்திரிகள் ஒரே த்ரவ்யம் அளிப்பதனால் தலைக்கு 54 ஆஹூதி வருகிறது.

    மூண்று த்ரவ்யத்திற்கும் சேர்த்து 108 ஆஹூதியானால் ஒரு சாஸ்திரிகளுக்கு 18 ஆஹூதி எனவும் திட்டமிடலாம். லகு சதம் 108/6=18.. ஹவிஸ்=அன்னம்=அ. ;;ஆஜ்யம்=நெய்=ஆ;; சமித்து=சமித்=ஹோமக்குச்சி. இவை மூன்று த்ரவ்யம்.

    எள்ளு மட்டும் ஹோமம் செய்யும் போதும், அருகம்புல் மட்டும் ஹோமம் செய்யும் போதும், 1008 ஆவர்தி/1008/6=168 ஆவர்த்தி தலைக்கு ஹோமம் செய்யலாம்.

    லகு ஸஹஸ்ர ஆவர்த்தி ஹோமம் என்றால் 336/6=56 ஆவர்த்தி தலைக்கு 56 ஆவர்த்தி செய்து முடிக்கலாம். 336x3=1008.

    சதாவர்த்தி என்றால் 18x6=108. தலைக்கு 18 ஆவர்தி செய்யலாம்.

    லகு சதாவர்த்தி என்பதற்கும் தலைக்கு 18 ஆவர்த்திகளே செய்து விட்டாலும் அதிக நேரமாகாது.

    அன்னம்+நெய்+ சமித்தினால் ஹோமம் செய்யும் போது பீம ருத்திரர்ருக்கு செய்ததில் பாதி அளவு கணக்கிட்டு ஹோமம்: ப்ருஹ்மாவிற்கும், விஷ்ணுவிற்கும், துர்கைக்கும், திக் பாலகர்களுக்கும் செய்தால் போதும்.

    ஒரே கலசத்தில் ஆவாஹன மாகியுள்ள நவகிரஹங்களுக்கு ஹோமம் செய்யும் போது..ஒரு கிரஹத்திற்கு மூன்று திரவ்யங்களும் சேர்த்து 12 ஆஹூதிகள் கொடுத்து , 9 கிரஹங்களுக்கும் மொத்தமாக 108 ஆவர்த்திகள்
    ஹோமம் செய்வதாக லகு சதத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    யஜுர் வேதத்திற்கு இந்த அட்டவணை கொடுக்கபட்டிருக்கிறது. ருக் வேதம், சாம வேததிற்கு வேறு அட்டவணைகள் வரும்.. சில மந்திரங்களிலும் மாறுதல்கள் தெரிவிக்கிறேன்.

    இது தவிற ஆயுஷ்ய ஹோமம், அஷ்ட வாக்கிய ஜன்ம நக்ஷத்திரங்கள் ஹோமம் செய்து விட்டு ஸ்விஷ்டக்ருத் ஹோமம், ஜயாதி ஹோமம்,அக்னி உபரிஷ்டாத் தந்திர கார்யங்கள், அக்னி உபஸ்தானம் செய்யவும்..

    பிறகு கலச தேவதைகளுக்கு புநர் பூஜை, ப்ரதான கலசத்திற்கு சிவாஷ்டோத்ர அர்ச்சனை, தூபம், தீபம், நைவேத்யம் ,கற்பூர ஹாரத்தி, ப்ரதக்ஷிண நமஸ்காரம்,கலச தேவதை யதாஸ்தானம், கலச ஜலம், ப்ரோக்ஷ*ணம், ,கலச ஜலம் சாப்பிடுதல், கலச ஜல அபிஷேகம்.
Working...
X