5. திருவரங்கத்து மாலை - 67/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 17/25

நிணக் கோல நேமித் திருவரங்கேச ! நினக்கு இனிய
குணக் கோனகையும் கண்டனளோ மணிக்குன்றில் வைகும்
கணக் கோதையர் பதினாயிரவரைக் கைப் பிடிக்க
மணக்கோலமும் பதினாறாயிரம் கொண்டு வாழ்ந்த அன்றே

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபதவுரை :

நிணக் கோல நேமி பகைவரது கொழுப்பு தோய்ந்த அழகிய சக்கரத்தை உடைய
திருவரங்கேச திரு அரங்க நாத !
மணிக்குன்றில் வைகும் நீ இரத்தின பருவதத்தில் தங்கி இருந்த
கணக் கோதையர் பதினாயிரவரைக் கூட்டமாகிய பதினாயிரம் கன்னியரை
கைப் பிடிக்க திருமணம் செய்து அருள
மணக்கோலமும் பதினாறாயிரம் அத்தனை ஆயிரம் திருமணத் திருமேனியை
கொண்டு வாழ்ந்த அன்றே எடுத்து மகிழ்ந்த அப்பொழுது
நினக்கு இனிய உனக்கு மிகப் பிரியமான
குணக் கோனகையும் நற்குணம் உள்ள திரு மகளும்
கண்டனளோ உன்னைப் பார்த்தாளோ ?

V.Sridhar