5. திருவரங்கத்து மாலை - 71/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 21/25 (கண்ணன் தூது)

இசை அளவிட்ட அரங்கேசர் ஐவர் தம் ஏவலின் போய் ,
வசை அளவிட்ட மகிபன் முன்னே - வளரும் திரள் தோள்
திசை அளவிட்டன ; பார் அளவிட்டன , சேவடி ; வான்
மிசை அளவிட்டன , பொன் முடி ; மேல் என் விளம்புவதே ?

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபதவுரை :

இசை அளவிட்ட அரங்கேசர் உலகு அளாவிய புகழ் பெற்ற அரங்க நாதர்
ஐவர் தம் ஏவலின் போய் பஞ்ச பாண்டவர்களின் கட்டளையினால் ,
வசை அளவிட்ட மகிபன் முன்னே இழி சொற்கள் மிகுந்த துரியோதனன் முன்பே
வளரும் திரள் தோள் மென்மேலும் வளர்ந்த திரண்ட தோள்கள்
திசை அளவிட்டன திக்குகளை அளாவின ;
பார் அளவிட்டன சேவடி சிவந்த திருவடிகள் பூமியை அளாவின ;
பொன் முடி பொன் மயமான முடி அணிந்த தலைகள்
வான் மிசை அளவிட்டன தேவ உலகத்தை அளாவின ;
மேல் என் விளம்புவதே ? இதற்கு மேல் என்ன சொல்வது ?

V.Sridhar