Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 71/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 71/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார

    5. திருவரங்கத்து மாலை - 71/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 21/25 (கண்ணன் தூது)

    இசை அளவிட்ட அரங்கேசர் ஐவர் தம் ஏவலின் போய் ,
    வசை அளவிட்ட மகிபன் முன்னே - வளரும் திரள் தோள்
    திசை அளவிட்டன ; பார் அளவிட்டன , சேவடி ; வான்
    மிசை அளவிட்டன , பொன் முடி ; மேல் என் விளம்புவதே ?

    பதவுரை :

    இசை அளவிட்ட அரங்கேசர் உலகு அளாவிய புகழ் பெற்ற அரங்க நாதர்
    ஐவர் தம் ஏவலின் போய் பஞ்ச பாண்டவர்களின் கட்டளையினால் ,
    வசை அளவிட்ட மகிபன் முன்னே இழி சொற்கள் மிகுந்த துரியோதனன் முன்பே
    வளரும் திரள் தோள் மென்மேலும் வளர்ந்த திரண்ட தோள்கள்
    திசை அளவிட்டன திக்குகளை அளாவின ;
    பார் அளவிட்டன சேவடி சிவந்த திருவடிகள் பூமியை அளாவின ;
    பொன் முடி பொன் மயமான முடி அணிந்த தலைகள்
    வான் மிசை அளவிட்டன தேவ உலகத்தை அளாவின ;
    மேல் என் விளம்புவதே ? இதற்கு மேல் என்ன சொல்வது ?

    V.Sridhar
Working...
X