5. திருவரங்கத்து மாலை - 76/114 : ஸ்ரீ வேத வியாசர் அவதாரம்
அரா அணையில் துயில் தென் அரங்கா ! மறை ஆயும் வண்ணம்
பராசரன் மா மகன் ஆகிய நீ பண்டு பாரதப் போர்
பொரா விழும் நூற்றுவர் சேனை எல்லாம் புனல் கங்கை வெள்ளத்-
தராதல மேல் வரக் காட்டியவா - தந்தை சந்திக்கவே
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
பதவுரை :
அரா அணையில் துயில் பாம்புப் படுக்கையில் யோக நித்திரை செய்யும்
தென் அரங்கா தென் அரங்கனே !
மறை ஆயும் வண்ணம் வேதங்களை ஆய்ந்து சீர் திருத்தும்படி
பராசரன் மா மகன் ஆகிய நீ பராசார முனிவரது சிறந்த புத்ரன் வியாசன் ஆன நீ
பண்டு பாரதப் போர் முன்னே பாரத போரில்
பொரா விழும் போரிட்டு இறந்து கிடந்த
நூற்றுவர் சேனை எல்லாம் துரியோதனாதியர் நூற்றுவரையும் , சேனைகளையும்
தந்தை சந்திக்கவே அவர்களது தந்தை ஆகிய திருதராஷ்டிரன் காணும்படி
புனல் கங்கை வெள்ளத்தராதல மேல் கங்கை நீரின் வெள்ளத்தின் மேல்
வரக் காட்டிய ஆ வரும்படி காண்பித்தது எப்படி ?
V.Sridhar
Bookmarks