5. திருவரங்கத்து மாலை - 79/114 : அரங்கர் தம் உண்மை !

உம்பர்க்கு அரிய பெருமாள் அரங்கர் தம் உண்மை எல்லாம்
இம்பர்க்கு உலகில் வெளியிடவே - 'சரண் இல்லை' என்று ஓர்
கும்பக் கடக் கயம் கூப்பிடச் சென்றதும் , கோளரியாய்த்-
தம்பத்து உதித்ததும் , தாழிக்கு வீட்டினைத் தந்ததுமே

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபதவுரை :

ஓர் கும்பக் கடக் கயம் குடம் போன்ற மத்தகத்தை உடைய ஒரு கஜேந்திரன் ,
சரண் இல்லை என்று கூப்பிட "வேறு சரணம் இல்லை" என்று அழைக்க ,
சென்றதும் உடனே நீ அங்கு விரைந்து சென்றதும் ,
கோளரியாய் வலிமை உடைய நரசிங்கமாய் ,
தம்பத்து உதித்ததும் கம்பத்திலிருந்து தோன்றியதும் ,
தாழிக்கு ததி பாண்டனுடைய தயிர்த் தாழிக்கு ,
வீட்டினைத் தந்ததுமே பரம பதத்தை அளித்ததும் ,
உம்பர்க்கு அரிய பெருமாள் தேவர்களுக்கும் காண முடியாத பெரிய பெருமாள் ஆன
அரங்கர் திரு அரங்க நாதனின்
தம் உண்மை எல்லாம் தத்துவத்தின் இரகசியங்களை எல்லாம்
இம்பர்க்கு உலகில் இவ்வுலகத்தில் உள்ளவர்களுக்கு
வெளியிடவே வெளிப் படுத்தி விட்டன

V.Sridhar